Veetla Vishesham Trailer : ஐபிஎல் போட்டியின் போது ‘வீட்ல விசேஷம்’ டிரைலர் ரிலீஸ் - மாஸ் காட்டும் ஆர்.ஜே.பாலாஜி

Veetla Vishesham Trailer : ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 

RJ Balaji directional Veetla Vishesham movie trailer release date announced

ரேடியோ ஜாக்கியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஆர்.ஜே.பாலாஜி, சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி நானும் ரவுடி தான், தேவி, இவன் தந்திரன் போன்ற படங்களில் நடித்து அசத்தினார். இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு வெளியான எல்.கே.ஜி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். 

இதையடுத்து நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்த அவர், அப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். இப்படம் வெற்றியடைந்ததை அடுத்து ரீமேக் படம் ஒன்றை கையில் எடுத்தார் ஆர்.ஜே.பாலாஜி. அதன்படி பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பதாய் ஹோ படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

அதன்படி வீட்ல விசேஷம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி உள்ளார் ஆர்.ஜே.பாலாஜி. சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், ‘வீட்ல விசேஷம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் நாளை நடைபெறும் லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான ப்ளே ஆஃப் போட்டியின் இடையில் வெளியிடப்படும் என ஆர்.ஜே.பாலாஜி கூறி உள்ளார். அவர் இதற்கு முன் நடித்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் டிரைலரும் அவ்வாறே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Nayanthara : கண்மணிக்கு கறி விருந்து வைத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் நயன்தாராவின் ரொமாண்டிக் டின்னர் வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios