Nayanthara : கண்மணிக்கு கறி விருந்து வைத்த விக்னேஷ் சிவன்... வைரலாகும் நயன்தாராவின் ரொமாண்டிக் டின்னர் வீடியோ

Nayanthara : நயன்தாராவுக்கு பிடித்த கடல் உணவுகளை அவருக்கு ஊட்டிவிட்டு ஜாலியாக டின்னர் சாப்பிட்ட வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Nayanthara enjoys eating sea foods with her lover vignesh shivan

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தில் பணியாற்றியபோது தான் இவர்கள் இருவருக்குமிடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து 7 ஆண்டு இடைவெளிக்கு பின் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் அண்மையில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் நயன்தாரா. இப்படத்தில் நடித்தது மட்டுமின்றி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் மூலம் தயாரித்தும் இருந்தார் நயன்தாரா. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் வெற்றிப் படமாக அமைந்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி அவர்கள் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறதாம்.

நேற்று காதலியுடன் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபட்ட விக்னேஷ் சிவன், அப்போது எடுத்த வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், தற்போது நயன்தாராவுக்கு பிடித்த கடல் உணவுகளை அவருக்கு ஊட்டிவிட்டு ஜாலியாக டின்னர் சாப்பிட்ட வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Suriya 41 : பாலா படத்தை கண்டுகொள்ளாத சூர்யா... கைவிடப்படுகிறதா ‘சூர்யா 41’ திரைப்படம்?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios