கொரோனா வைரஸ் காரணமாக, அனைத்து வேலைகள், தொழில் சாலைகள், மற்றும் நிறுவங்கள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக 144 தடை போடப்படுவதற்கு முன்பே, மக்கள் அதிகம் ஒன்று கூடும் இடங்களான திரையரங்கம், மால் போன்றவை மூட வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்தது.

மேலும் , அரசின் அனுமதி இன்றி திறக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இதனால் அனைத்து மால்கள், மற்றும் திரையரங்கங்கள் மூடியே உள்ளது. தொழிலாளர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர், இரு வாரங்களுக்கு மேலாக பூட்டியே இருக்கும் திரையரங்கை பார்க்க வேண்டும் என அரசிடம் அனுமதில் பெற்று உள்ளே சென்று பார்த்ததாகவும், அங்கு அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

திரையரங்கத்தில் நடமாட்டம் இல்லாததால், எலிகள் கூடாரமாக மாறி... மக்கள் அமர்ந்து திரைப்படம் பார்க்கும் சீட்... திரை சீலை என அனைத்திற்கும் சேதாரத்தை ஏற்படுத்தியுள்ளது எலிகள்.

இதை தொடர்ந்து, அவர் மற்ற திரையரங்க நண்பர்களுக்கும் போன் செய்து... அரசு அனுமதி பெற்று, ஒரு முறையாவது உங்களுடைய திரையரங்கம் நல்லபடியாக உள்ளதா என பார்த்து விட்டு வருமாறு அறிவுரை கூறி வருகிறாராம்.