உயிர் கொல்லி வைரஸான கொரோனா உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டி படைக்கிறது. இந்த கொடூர வைரஸில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ள சமூக விலகல் ஒன்றே சரியான வழி என்பதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாள் தோறும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது. தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை  ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 422 ஆக அதிகரித்துள்ளது. 27 லட்சத்து 36 ஆயிரத்து188 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பில் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பலி எண்ணிக்கை மட்டும் மூன்றில் இரண்டு அதிகரித்து வருகிறது.

இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

குறிப்பாக ஹாலிவுட் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர் இந்த கொடூர நோய்க்கு எதிராக போராடி வரும் நிலையில், புகழ் பெற்ற இசைக்கலைஞர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

உலக புகழ் பெற்ற ராப் இசை கலைஞரான பிரடெரிக் தாமஸ் என்பவருக்கு கடந்த 6ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ராப் இசை உலகின் முக்கிய நபரான பிரடெரிக் தாமஸின் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 35 வயதான பிரடெரிக்கின் திடீர் மரணம் இசை உலக ஜாம்பவான்கள் பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.