ஆபாச படங்களில் நடித்து பிரபலமான ஜானி சின்ஸ் உடன் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் விளம்பரம் ஒன்றில் நடித்ததை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் ரன்வீர் சிங். நடிகை தீபிகா படுகோனேவின் கணவரான இவர், அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நிர்வாணமாக போட்டோஷூட் நடத்தி, அதை டிரெண்ட் ஆக்கினார். ரன்வீரின் இந்த செயலுக்கு கண்டனங்கள் ஒருபுறம் குவிந்தாலும், அவருக்கு ஆதரவாக சில ஹீரோக்கள் அவ்வாறு போட்டோஷூட் நடத்தி அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்த நிலையில், தற்போது அவர் சிக்கியுள்ள லேட்டஸ்ட் சர்ச்சை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி அவர் சமீபத்தில் விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அந்த விளம்பரம் தான் தற்போது காட்டுத்தீ போல் பரவி இருக்கிறது. அந்த விளம்பரத்தில் அவர் ஆபாச பட நடிகர் ஜானி சின்ஸ் உடன் சேர்ந்து நடித்திருப்பது தான் இந்த சர்ச்சைக்கு காரணம். பாலியல் ஆரோக்கியத்திற்காக விற்கப்படும் மருந்துகளை விளம்பரப்படுத்தும் வகையில் அந்த காணொளி அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனா இது? கமல் படத்துக்காக கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் SK - போட்டோ பார்த்து மெர்சலான ரசிகர்கள்

மேலும் அதனை இந்தி சீரியல் பாணியில் படமக்கி உள்ளனர். அந்த விளம்பரம் ஆரம்பத்தில் வைரலான போது, சிலர் இது டீப் பேக் டெக்னாலஜியை பயன்படுத்தி யாராவது எடிட் செய்த வீடியோவாக இருக்கும் என அனைவரும் கருதினர். ஆனால் பின்னர் தான் ரன்வீர் சிங்கும், ஜானி சின்ஸும் உண்மையாகவே சேர்ந்து நடித்துள்ளனர் என்று தெரியவந்தது. இந்த வீடியோ வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

ஜானி சின்ஸ் உடன் ரன்வீர் சிங் நடித்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள், காசுக்காக இப்படி இறங்கிவிட்டாரே என சாடி வருகின்றனர். விளம்பரம் வாயிலாக பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ள ஜானி சின்ஸ், விரைவில் படங்களில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பது தான் நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.

Scroll to load tweet…

விஜய்யின் GOAT படத்தில் Vijayakanth..! கேப்டனை மீண்டும் திரையில் கொண்டுவரப்போவது எப்படி?

இதையும் படியுங்கள்... எனக்கும் அரசியல் ஆசை இருக்கு... விஜய்க்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாம் - நடிகை வாணி போஜன் ஓபன் டாக்