நீலாம்பரி போல் மாறி, வயசானாலும், உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்கள விட்டு போகல என்கிற டயலாக் பேசி ரஜினிகாந்துக்கு மாஸாக பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் ஜெயிலர். நெல்சன் இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், ஷிவ ராஜ்குமார், வஸந்த் ரவி, விநாயகன், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் பிசியாக நடந்து வரும் நிலையில், இன்று ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு அப்படத்தில் இருந்து ரஜினியின் கேரக்டர் பெயர் அடங்கிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர். அதன்படி இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற கேரக்டரில் ரஜினி நடித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தனர்.

இதையும் படியுங்கள்... பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல... ‘ஜெயிலர்’ ரஜினியின் மாஸான கேரக்டர் பெயரை வெளியிட்ட படக்குழு

இதையடுத்து ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் பணியாற்றிய நடிகர்கள் ஒவ்வொருவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி அதனை தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளனர். இயக்குனர் நெல்சன், நடிகர்கள் யோகிபாபு, ஷிவ ராஜ்குமார், வஸந்த் ரவி, விநாயகன் மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் அந்த வீடியோவில் பேசி உள்ளனர்.

Scroll to load tweet…

அதில் ரம்யா கிருஷ்ணன் பேசியது தான் ஹைலாட்டாக அமைந்துள்ளது. படையப்பா பட நீலாம்பரி போல் மாறி, வயசானாலும், உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்கள விட்டு போகல என்கிற டயலாக் பேசியுள்ள ரம்யா கிருஷ்ணன், என்னுடைய படையப்பா இப்போ என்னுடைய ஜெயிலர் ரஜினி சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... நடிச்சது ஒரே ஒரு விளம்பரம்.. அதன்பின் கோடி ரூபாய் கொடுத்தாலும் ரஜினிகாந்த் விளம்பரங்களில் நடிக்க மறுப்பது ஏன்?