Asianet News TamilAsianet News Tamil

Ramarajan: குடிகளுக்கு ஏன் குடி? விஷச்சாராய மரணத்தால் கொதித்தெழுந்த ராமராஜனின் வேதனை அறிக்கை!

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயத்தால் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து ஆவேசமாக அறிக்கை வெளியிட்டு தன்னுடைய கண்டனத்தை வெளிப்படுத்தியுளளார் நடிகரும் அரசியல்வாதியுமான ராமராஜன்.
 

Ramarajan angry statement on Kallakuruchi illicit liquor death mma
Author
First Published Jun 21, 2024, 8:47 PM IST | Last Updated Jun 22, 2024, 9:20 AM IST

கடந்த 10 வருடங்களுக்கு பின்னர் சாமானியன் படம் மூலம் மீண்டும் தன்னுடைய ரீ-என்ட்ரியை திரையுலகில் பதிவு செய்த ராமராஜன், தற்போது விஷச்சாராயம் அருந்தி உயிர்விட்டவர்களையும், வருங்கால சங்கதியையும் நினைத்து ஆதங்கத்தோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுளளார்.

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, "ஐம்பது மரணங்கள் என்பது ஒரு சின்ன கிராமத்தில் நினைத்துப் பார்க்க இயலவே இல்லை. கிராமங்களில் ஒரு மரணம் என்றாலே அத்தனை வீடும் சோறு பொங்காது. சாப்பிடாது. துயரத்தில் பங்கெடுக்கும். 

Ramarajan angry statement on Kallakuruchi illicit liquor death mma

செம்ம தில்லு! கள்ளச் சா…. வுக்கு எதுக்கு? கள்ளக்குறிச்சி விஷச்சாராய நிவாரணத்தை விமர்சித்த பார்த்திபன்!

இங்கு ஐம்பது வீடுகள் அதன் சொந்த பந்தங்கள் எப்படி துயர் கொண்டிருப்பர் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்னால். 

கொரோனா கொத்துக் கொத்தாய் அள்ளிய மரணங்கள் போல் இந்த கள்ளச் சாராய சாவு எண்ணிக்கையும் பயப்படுத்திக் கொண்டே உயர்கிறது. 

இழப்பு நாம் இயல்பாக சந்திப்பது. ஆனால் இத்தகைய இழப்பு நம் முன் கோரக் கொடூர முகம் காட்டிச் செல்கிறது. 

Ramarajan angry statement on Kallakuruchi illicit liquor death mma

Vijay First Salary: இன்று ரூ.200 கோடி சம்பளம் வாங்கும்... தளபதி விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மனிதர்களைக் குடி எப்படிக் கொல்கிறது என்பது நிகழ்காலப் பாடமாக நிகழ்ந்திருக்கிறது. குடிகளுக்கு ஏன் குடி? அவசியமற்ற ஒன்றை மகிழ்ச்சி என்ற பெயரில் மக்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது பல குடும்பங்களின் நல்லுறவை சிதைக்கிறது. சிதைக்கு அனுப்புகிறது. 

இன்றைய காலகட்டத்தில் எதிர்கால சந்ததிகளுக்கு நாம் செய்ய வேண்டியது மது கலாச்சாரமா? போதைப் பொருள் கலாச்சாரமா? தெரியவில்லை. 

அவர்கள் நன்றாக ஆரோக்கியத்துடன் குடும்பங்களை உருவாக்க வேண்டியவர்கள் என்பதை எப்போது உணர்ந்துகொள்ள வைக்கப் போகிறோம்?  ஒரு படத்தின் ஆரம்பத்தில் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதோடு நம் சமூக அக்கறை முடிந்து போகிறதா? குடியால் நாம் இழந்தவர்கள் அதிகம். 

அதுவும் இந்த கள்ளச் சாராய சாவுகள் இழப்பின் உச்சம். இதுக்கு காரணமானவர்கள் 50 பேரின் கொலையாளிகளாக தீர்க்கப்பட வேண்டும். 

Ramarajan angry statement on Kallakuruchi illicit liquor death mma

நயன்தாரா.. த்ரிஷாலாம் லிஸ்டுலையே இல்ல! இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் ரஜினி, விஜய், பட நாயகிகள்!

 நீதி தனது கடமையை செய்யும் என எப்போதும் நம்புபவன் நான். நிச்சயம் சட்ட வரைமுறைகள் அவர்களைத் தண்டிக்கட்டும். 

அரசு விரைந்து விசச் சாராய மரணங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். மனிதம் மிக உயர்ந்தது. அதைவிட நம்மை நாமாக வைத்துக் கொள்வது வேறெதுவுமில்லை. மனிதம் காப்போம். மரணம் தவிர்ப்போம். 

இறந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்." என கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios