- Home
- Gallery
- நயன்தாரா.. த்ரிஷாலாம் லிஸ்டுலையே இல்ல! இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் ரஜினி, விஜய், பட நாயகிகள்!
நயன்தாரா.. த்ரிஷாலாம் லிஸ்டுலையே இல்ல! இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் ரஜினி, விஜய், பட நாயகிகள்!
இந்திய சினிமாவில், அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 ஹீரோயின்ஸ் பற்றிய தகவல் தற்போது வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

முன்னணி நடிகர்களுக்கு வழங்கும் சம்பளத்தை விட, ஹீரோயின்களுக்கு மிகவும் குறைவாகவே கொடுக்கப்படுகிறது. திரையுலகில் இது எழுதப்படாத விதியாகவும் உள்ளது. தமிழில் திரையுலகில் கூட விஜய், அஜித், ரஜினி, போன்ற முன்னணி நடிகர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள் என்றால் கதாநாயகிகளுக்கு இவர்களுக்கு கொடுப்பதில் 10 சதவீதத்தை கூட கொடுக்க யோசிக்கும் நிலையில் தான் பல தயாரிப்பாளர்கள் உள்ளனர்.
இதற்க்கு முக்கிய காரணம் ஹீரோவுக்கு வாரி வழங்கிய சம்பளத்தை... மற்ற விஷயங்களில் தான் இழுத்து பிடித்து இவர்கள் சமாளிக்க வேண்டி உள்ளது. சரி ஹீரோக்கள் அளவு இல்லை என்றாலும்... மற்ற நடிகைகளை விட அதிக சம்பளம் பெரும், டாப் 5 இந்திய நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய நடிகைகளில் அதிகம் சம்பளம் பெரும் ஹீரோயினாக முதலிடத்தில் உள்ளவர் தீபிகா படுகோன் தான். இவர் தற்போது நடித்து முடித்துள்ள கல்கி படத்திற்கு ரூ.25 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய கால் ஷீட் , கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்திற்கு ஏற்ப, ரூ.15 கோடி முதல் ரூ.30 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. தீபிகா படுகோன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், கோச்சடையான் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து நடிகை , இயக்குனர் தயாரிப்பாளர் என்பதை தாண்டி பாஜக கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தற்போது எம்.பி-யாக மாறியுள்ள கங்கனா ரணாவத் ஒரு படத்துக்கு ரூ.15 கோடி முதல் ரூ.27 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தில் உள்ளவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக 'தமிழன்' படத்தில் நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா தான். இவர் பாலிவுட் தாண்டி ஹாலிவுட் பிரபலமாகவும் பார்க்கப்படும் நிலையில், ஒரு படத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.25 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.
இவரை தொடர்ந்து நான்காவது இடத்தில் உள்ளவர் நடிகை கத்ரீனா கைஃப் தான். இவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடி முதல் ரூ.23 கோடி வரை சம்பளமாக கூறப்படுகிறது. கத்ரீனா நடிகர் விக்கி கௌசலை திருமணம் செய்து கொண்ட பின்னர், தான் நடிக்கும் படங்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து கொண்டார்.
இந்த லிஸ்டில் 5-ஆவது இடத்தில் உள்ளவர்... பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட் தான். திருமணம் ஆகி குழந்தை பெற்று கொண்ட பின்னரும் கவர்ச்சிக்கு குறைவைக்காத இவர் ஒரு படத்திற்கு ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் கேட்கிறார்.
ஆனால் இந்த லிஸ்டில் கடைசி இடத்தில் கூட... கோலிவுட் சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சவுத் குயின் த்ரிஷா ஆகியோர் இல்லாதது பல ரசிகர்களுக்கு வருத்தமே. நயன்தாரா ஹீரோயினாக நடித்த ஜவான் படத்தில் கூட சம்பள விஷயத்தில் நயனை டம்மி ஆக்கி விட்டு தீபிகாவுக்கே 30 கோடி சம்பளத்தை படக்குழு வாரி வழங்கியது குறிப்பிடத்தக்கது.