- Home
- Gallery
- Vijay First Salary: இன்று ரூ.200 கோடி சம்பளம் வாங்கும்... தளபதி விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Vijay First Salary: இன்று ரூ.200 கோடி சம்பளம் வாங்கும்... தளபதி விஜய்யின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், தன்னுடைய முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு தளபதி விஜய்க்கு தானாகவே அமைந்தது. அதேபோல் சினிமாவில் கதாநாயகனாக மாறும் வாய்ப்பும், இவருக்கு மிக எளிதாகவே கிடைத்தது. ஆனால் வாரிசு நடிகர் என்கிற காரணத்தினாலேயே தன்னுடைய முதல் படமான 'நாளைய தீர்ப்பு' படத்திற்காக மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தார் விஜய். தளபதி விஜய் அதை கடந்து வரவே பல மாதங்கள் ஆனது என பேட்டி ஒன்றியில் விஜய்யின் அம்மா ஷோபா தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து தன்னுடைய தந்தை மற்றும் தாயின் அறிவுறுத்தலால் அதில் இருந்து வெளியே வந்த விஜய், முன்னணி நடிகராக மாறுவதற்கு எதிர்கொண்ட சவால்களும், பட்ட அடிகளும் கொஞ்சம் நஞ்சம் இல்லை. இவர் கடந்து வந்த பாதைகள் தான் இன்று தளபதி விஜய்யை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாட கூடிய முக்கிய நடிகராக மாற்றி உள்ளது.
தளபதி விஜய்க்கு தமிழில் மட்டுமல்லாது தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக இவருடைய டான்ஸ் டச்சை வர்ணிக்க வார்த்தை இல்லை.
ரசிகர்கள் மனதில் ஒரு நடிகராக இத்தனை நாள் நீங்காத இடம் பிடித்த தளபதி, அதிரடியாக தன்னுடைய அரசியல் பிரவேசத்தையும் துவங்கி உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கியுள்ள விஜய், தேர்தலை சந்திப்பதற்கு முன்பே மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்வதோடு களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்.
அரசியலில் இறங்க உள்ளதால் தன்னுடைய 69-ஆவது படம் தான் கடைசி படம் என தளபதி அறிவித்துள்ளார். விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கோட்' திரைப்படத்திற்கு விஜய்க்கு சம்பளமாக 200 கோடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் தன்னுடைய கடைசி படமாக உருவாகும் தளபதி 69 படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் பெற உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Thalapathy vijay
இன்று கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வரும் தளபதி விஜய், தன்னுடைய முதல் படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்று தெரிந்தார் அதிர்ச்சி ஆகிடுவீங்க. தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக முதல் முதலில் அறிமுகமான படம், 1984 இல் வெளியான வெற்றி என்கிற படம் தான். இந்த படத்தில் நடிப்பதற்காக தளபதி விஜய்க்கு 500 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்டதாம். இதனை பேட்டி ஒன்றில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.