குழந்தை பிறக்க போகும் ராசி.! தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த ராம் சரண்... ஹீரோ யார் தெரியுமா?

குளோபல் ஸ்டார் ராம் சரண் மற்றும் விக்ரம் ரெட்டியின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து,  தங்களின் முதல் படமான ‘தி இந்தியா ஹவுஸ்’ படத்தின் அறிவிப்பை, வெளியிட்டுள்ளனர்.
 

Ram charan turn to producer officially announced pan India film the India house

குளோபல் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் ராம் சரண், திரையுலகில் முன்னணி நடிகர் என்கிற இடத்தை பிடித்து விட்ட நிலையில், விரைவில் ஒரு குழந்தைக்கு தந்தை என்கிற பொறுப்பையும் வகிக்கிக்க உள்ளார். இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்.  

தனது நண்பரான விக்ரம் ரெட்டியின் UV கிரியேஷன்ஷுடன் இணைந்து ரசிகர்களுக்கு தனித்துவமான கதைகளை அளிப்பதுவும்,  அதே வேளையில், திரையுலகில் புதிய திறமைகளை உருவாக்குவது மற்றும் ஊக்குவிப்பதுவே இந்நிறுவனத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளனர். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் என்பது தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற ப்ளாக்பஸ்டர் படைப்புகளை வழங்கிய  தனித்துவமான தயாரிப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனங்கள் இணைந்து தங்களது முதல் பிரமாண்ட படைப்பை அதிரடியாக அறிவித்துள்ளனர்.

டேய் புருஷா... திரும்பவும் இந்த தப்ப பண்ணா இது தான் தண்டனை! விவாகரத்து சர்ச்சைக்கு மஹாலட்சுமி வேற லெவல் பதில்!

Ram charan turn to producer officially announced pan India film the India house

'வி மெகா பிக்சர்ஸ்' மற்றும் 'அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ்' ஆகிய நிறுவனங்கள்  தங்களது முதல் திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தை இணைந்து  வழங்குவதில் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த கூட்டணியின் இந்த முதல் முயற்சியில், திறமையான நடிகர்கள் மற்றும் திறமையான  தொழில் நுட்ப குழுவினருடன் ஒரு சிறந்த நட்சத்திரக் குழுவாக இப்படம் இருக்கும் என ரசிகர்களிடம் உத்தரவாதம் அளிக்கும்  வகையில்,  இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ராம் வம்சி கிருஷ்ணா  இயக்குவதாக அறிவித்துள்ளனர், மேலும் டைனமிக் ஹீரோ நிகில் சித்தார்த்தா மற்றும் மூத்த நடிகர் அனுபம் கெர் ஆகியோர் இப்படத்தில் நடிக்கின்றனர். 

அடேங்கப்பா ஓப்பன் நெக்? கழண்டு விழுந்துட போகுது... டாப் ஆங்கிளில் தாறுமாறு பண்ணும் கீர்த்தி சுரேஷ்!

அனைவராலும் போற்றப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பு, குளோபல் ஸ்டார் ராம் சரண் அவர்களின் வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் ஆகியவற்றின் சமூக ஊடக கணக்குகள் வழியாக அழகான வீடியோவுடன் வெளியிடப்பட்டுள்ளது. 

Ram charan turn to producer officially announced pan India film the India house

இந்திய பார்வையாளர்களை மீண்டும் ஒரு பெரும் சகாப்தத்திற்கு அழைத்துச் சென்று அவர்களின் இதயத்தைத் தொடும் அளவிற்கு ஒரு அனுபவத்தை இப்படம் வழங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  லண்டனில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட டீசர் படத்தின் களத்தை சொல்வதாக அமைந்துள்ளது. தி இந்தியா ஹவுஸைச் சுற்றி அரசியல் கொந்தளிப்பு நிலவும் சூழலில்,  ஒரு காதல் கதையை இப்படம்  சொல்கிறது. எரியும் இந்தியா ஹவுஸின் பிரமாண்ட காட்சியுடன் இந்த டீசர் முடிவடைகிறது. 


வி மெகா பிக்சர்ஸ் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இடையேயான கூட்டணி இந்திய திரையுலகில் மிக சக்திவாய்ந்த கூட்டணியின் துவக்கத்தை குறிக்கிறது.

சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? விளக்கம் கொடுத்த வி.ஜே.ரவி.. வரிந்து கட்டிய சக நடிகை! செம்ம ட்விஸ்ட்!

Ram charan turn to producer officially announced pan India film the India house

குளோபல் ஸ்டாராக அறியப்படும் ராம் சரண் தேசத்தை பெருமைப்படுத்தி மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் கொண்ட சினிமாவை உருவாக்கும் தொலைநோக்கு பார்வையுடன்  சிறந்த தயாரிப்பாளராக இருப்பார் என்று அபிஷேக் அகர்வால் பாராட்டியுள்ளார். இந்திய சினிமாவை மட்டுமின்றி உலகையே அதிர வைக்கும் இந்த அற்புதமான திரைப்படம்  குறித்த கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் குழந்தை பிறக்க போகும் ராசி தான், ராம் சரண் தன்னுடைய அடுத்த அவதாரத்தை எடுத்துள்ளார் என ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 
 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios