MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டேய் புருஷா... திரும்பவும் இந்த தப்ப பண்ணா இது தான் தண்டனை! விவாகரத்து சர்ச்சைக்கு மஹாலட்சுமி வேற லெவல் பதில்!

டேய் புருஷா... திரும்பவும் இந்த தப்ப பண்ணா இது தான் தண்டனை! விவாகரத்து சர்ச்சைக்கு மஹாலட்சுமி வேற லெவல் பதில்!

தயாரிப்பாளர் ரவீந்தர் சிங்கிளாக போட்டோ போட்டதால், நெட்டிசன்கள் பலர் விவாகரத்து சர்ச்சையை கிளப்பிய நிலையில், இதற்கு தற்போது க்யூட்டான பதிவால் பதில் கொடுத்துள்ளார், மஹாலட்சுமி. 

2 Min read
Author : manimegalai a
Published : May 28 2023, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து பிரபலமானவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், கடந்த ஆண்டு பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியை, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 

27

இந்த ஜோடியின் திருமணம் கடந்தாண்டு திருப்பதியில் நடந்தது. இது குறித்த புகைப்படங்கள் வெளியாக, பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமின்றி, இந்த ஜோடியை விமர்சனமும் செய்து வந்தனர். குறிப்பாக மகாலட்சுமி... ரவீந்தரின் பணத்திற்கு ஆசைப்பட்டு தான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி வந்தனர்.

ஒரு வாரத்தில் திருமணம்... பயங்கர விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த் - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

37

அதேபோல் திருமணமான கையோடு, ரவீந்தர் - மகாலட்சுமிக்கு 200 சவரனுக்கு மேல் நகை, பெரிய பங்களா, தங்கத்தாலான கட்டில், விலை உயர்ந்த பட்டுப் புடவைகள் போன்றவற்றை பரிசாக கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் தங்களுடைய திருமணம் குறித்து வெளியான விமர்சனங்களுக்கும் இருவரும் சேர்ந்து பல்வேறு பேட்டிகள் கொடுத்து பதிலடி கொடுத்து வந்தனர்.

47

அதைப்போல் அவ்வபோது தங்களுடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக, ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் ரொமான்டிக் புகைப்படங்களை தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்த இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ரவீந்தர் - சிங்கிளாக எடுத்த போட்டோஸை வெளியிட்டு, மிகவும் சோகமான கேப்டனை கொடுத்திருந்தார். அந்த பதிவில் "நேசிப்பதற்காகவே வாழ்கிறோம். கடினமான நேரங்களில் சிரியுங்கள், ஏனெனில் அவர்கள் உங்கள் சோகத்தில் மட்டுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என பதிவிட்டிருந்தார்.

அது உண்மை கதையே இல்ல... தி கேரளா ஸ்டோரி படத்தை பொளந்துகட்டிய கமல்ஹாசன்

57

ரவீந்திரன் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், மகாலட்சுமியுடன் சண்டையா என கேள்வி எழுப்பியதோடு தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து மீண்டும் ரவீந்தர் சிங்கிளாக இருக்கும் புகைப்படத்தை வெளியிடவே,  இருவருக்கும் விவாகரத்து நடைபெற போகிறது என்று வதந்தியை பரப்ப துவங்கி விட்டறார்கள்.

67

இதை பார்த்த மகாலட்சுமி,  தற்போது இந்த வதந்திக்கு மிகவும் கூலாக முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் போட்டுள்ள பதிவு, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. தன்னுடைய கணவருடன் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படத்தை வெளியிட்டு. "டே புருஷா எத்தனை முறை உன்னிடம் தனியாக இன்ஸ்டாகிராமில்  புகைப்படம் பதிவிடாதே என சொல்லி இருக்கிறேன். இப்ப பாரு மீண்டும் சோசியல் மீடியாவில் நாம் இருவரும் பிரிஞ்சிட்டோம் என செய்தி வெளியிடுகிறார்கள். மவனே இதுக்கு அப்புறம் , இந்த தப்பை திரும்ப செஞ்சா நீ என்னுடைய ஃபேவரட், சேமியா உப்புமாவை மூன்று வேலையும் சாப்பிட வேண்டி வரும் என செல்லமாக கண்டித்துள்ளார்.

நான் அதே பின்னணியில் இருந்து வந்தவள்.! 'கழுவேத்தி மூர்க்கன்' பட அனுபவம் குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன்!

77

இப்படி வதந்தியை பரப்பும் சில யூடியூப்களுக்கு,  தன்னுடைய மைண்ட் வாய்ஸ் எப்படி இருக்கிறது என்பது பற்றியும் அதில் தெரிவித்துள்ள மகாலட்சுமி, " இன்னுமாடா நாங்க ட்ரெண்ட்... இதுக்கு இல்லையா ஒரு எண்டு" என மிகவும் கூலாக கேப்ஷன் போட்டுள்ளார். அதேபோல் நாங்கள் எப்போதுமே மிகவும் சந்தோஷமான தம்பதிகள் என்பதையும் தெரிவித்துள்ளார் மகாலட்சுமி. இந்த பதிவு மற்றும் இவர் வெளியிட்டுள்ள புகைப்படமும், படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீண்டும் இணைந்த ரெளடி பேபி காம்போ... தனுஷ் உடன் ஜோடி சேர்ந்த சாய் பல்லவி..!
Recommended image2
4 ஹிட் 18 பிளாப்... அதிர்ச்சி அளிக்கும் கோலிவுட்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்..!
Recommended image3
மகாநதி சீரியல் முடியப்போகுதா? விஜய் - காவேரிக்கு என்ன ஆச்சு? யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved