MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? விளக்கம் கொடுத்த வி.ஜே.ரவி.. வரிந்து கட்டிய சக நடிகை! செம்ம ட்விஸ்ட்!

சம்யுக்தாவிடம் தவறாக நடந்தேனா? விளக்கம் கொடுத்த வி.ஜே.ரவி.. வரிந்து கட்டிய சக நடிகை! செம்ம ட்விஸ்ட்!

திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்து வரை வந்துள்ள, விஷ்ணுகாந்த் - சம்யுக்தாவின் குடும்ப பிரச்சனை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், சம்யுக்தாவின் பழைய காதல் விவகாரம் குறித்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : May 28 2023, 06:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

கடந்த மார்ச் மாதம், சீரியல் பிரபலமான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஈரோட்டில் விஷ்ணு காந்த் குடும்ப முறைப்படி நடந்த இந்த திருமணத்தில், பெரிதாக பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

குறிப்பாக சம்யுக்தா தரப்பில் இருந்து 25 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக அவரே தெரிவித்திருந்தார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக கோவிலில் நடந்த நிலையில், பின்னர் விஷ்ணுகாந்த் வீட்டிற்கு அருகே உள்ள சமுதாயக்கூடம் ஒன்றில் வரவேற்பு நடைபெற்றதாகவும் சம்யுக்தா கூறி இருந்தார். மேலும் திருமணம் ஆகி ஒரு மாதம் மட்டுமே இருவரும் ஒன்றாக வாழ்ந்த நிலையில், பின்னர் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர்.

டேய் புருஷா... திரும்பவும் இந்த தப்ப பண்ணா இது தான் தண்டனை! விவாகரத்து சர்ச்சைக்கு மஹாலட்சுமி வேற லெவல் பதில்!

37

பிரிந்த சில நாட்களிலேயே விஷ்ணுகாந்த், சம்யுக்தா பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை youtube சேனல் ஒன்றில் கூறிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தா வெளியிட்ட வீடியோவும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

47

தொடர்ந்து சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் இருவரும் மாறி மாறி தங்களுடைய பிரிவு குறித்தும், சாடி வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில், சமீபத்தில் விஷ்ணுகாந்த், சம்யுக்தா தன்னை காதலிக்கும் போதே மற்றொரு நபரிடமும் தொடர்பில் இருந்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சம்யுக்தா பற்றி பேசிய ஆடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

பிக்பாஸ் தாமரையின் பர்த்டே கொண்டாட்டம்! கியூட் போட்டோஸ்..
 

57

அந்த ஆடியோவில், ஆர்ஜே. ரவியை தான் காதலிக்கிறேன் என்று சொல்வதும், பின்னர் அவர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார் என்று சக நண்பர்களிடம்கூறுகிறார். அவரையும் காதலிப்பதாக கூறி கொண்டு, அப்படியே விஷ்ணு காந்தையும் காதலித்து வந்துள்ளார்.  அதற்கு சம்யுக்தாவின் நண்பர்கள் விளக்கம் கேட்டபோது,  என்னிடம் தவறாக நடந்து கொண்டது ரவி பற்றி ரவிவாயில் இருந்து ஒத்துக் கொள்ள வைப்பதற்காக தான் பேசினேன் என்று அந்த ஆடியோவில் கூறியிருக்கிறார். தற்போது இந்த ஆடியோவை விஷ்ணுகாந்த் வெளியிட இந்த பிரச்சனை சமூக வலைத்தளங்களில் கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

67

சம்யுக்தாவும் - வி ஜே.ரவியும் நிறைமாத நிலவே என்கிற வெப் சீரிஸில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அப்போது தான் இவர்கள் இருவருக்கு இடையேயும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 
நான் அதே பின்னணியில் இருந்து வந்தவள்.! 'கழுவேத்தி மூர்க்கன்' பட அனுபவம் குறித்து பேசிய நடிகை துஷாரா விஜயன்!

77

இதை தொடர்ந்து வி.ஜே .ரவி... சம்யுக்தா தவறாக நடந்து கொண்டதாக கூறியதற்கு நான் அப்படி பட்ட குடும்பத்தில் பிறந்தவன் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இவருடன் 'காதலே காதலே' வெப் சீரிஸில் இணைந்து நடித்து வரும் சக நடிகையான வெண்பா, ரவியின் இஸ்டாக்ராம் போஸ்ட்டை ஷேர் #westandwithravi என்கிற ஹேஷ்டேக் போட்டு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவும்... விஷ்ணுகாந்த் ஷேர் செய்துள்ள ஆடியோவும் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : குணசேகரனுக்கு செக் வைத்த நீதிமன்றம்... ஈஸ்வரிக்கு காத்திருக்கும் சவால்..!
Recommended image2
Keneeshaa: உருகி உருகி காதலித்த ரவி மோகன்... பிரேக் அப் பண்ணிய கெனிஷா? பிரிவுக்கு காரணம் என்ன?
Recommended image3
Siragadikka Aasai : மனோஜுக்கு வில்லியாக மாறிய விஜயா... வக்கீல் பார்த்த கோல்மால் வேலை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved