சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய கொரோனா வைரஸ் அந்நாட்டின் அனைத்து மாகாணங்களையும் பாதித்துள்ளது. அங்கு 3,245 பேர் கொரோனா பாதிப்பால் பலியாகி இருகின்றனர். சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவை புரட்டிப்போட்ட கொரோனா மற்ற நாடுகளில் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை காட்டிலும் இத்தாலியில் கொரோனா பலி அதிகரித்து 4,023 உயர்ந்திருக்கிறது. மேலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 627 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் அனைவரும் தங்களது வீட்டிற்குள் இருக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் சோதனை ஓட்டமாக நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும், மால்கள், தியேட்டர்கள், பூங்காக்கள், அருட்காட்சியம், டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.  

சற்று நேரத்திற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கொரோ வைரஸ் விழிப்புணர்வு குறித்தும், மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு கோரியும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: என்னய்யா இது வீட்டில இருக்க சொல்லுறீங்க...கொரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு கமல் கொடுத்த சூப்பர் ஐடியா...!

அதில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2வது கட்டத்தில் உள்ளது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய்விடக்கூடாது. கொரோனா வைரஸ் 12 மணி நேரத்தில் இருந்து 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே மூன்றாவது கட்டத்திற்கு பரவாமல் தவிர்க்க முடியும். அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதே போல் தான் இத்தாலியில் கொரோனா வைரஸின் தாக்கம் 2வது கட்டத்தில் இருந்த போது அந்நாட்டு அரசு மக்களை ஊரடங்கு உத்தரவில் பங்கேற்கும் படி அழைப்பு விடுத்தது. ஆனால் அவர்கள் அதை முக்கியமானதாக கருதாமல் உதாசீனப்படுத்திவிட்டனர். அதனால் தான் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியானது”. 

இதையும் படிங்க: “ராஜா ராணி” ஜோடிக்கு குட்டி இளவரசி வந்தாச்சு... மகிழ்ச்சியில் ஆல்யா - சஞ்சீவ்...!

“அப்படி ஒரு நிலைமை இந்தியாவிற்கு வரக்கூடாது. அதனால் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வரும் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவளிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உயிரையும் பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரை பிரதமர் மோடி அவர்கள் கூறியது போல, மனதார பாராட்டுவோம்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.