அமெரிக்காவில் முதன்முறையாக தனது முதல் செல்ஃபி வீடியோவை ரஜினி பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினி காந்த் தான். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும்டிகர் ரஜினிக்கு, தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன் லால், ஜாக்கி ஷெரஃப், ஷிவ்ராஜ்குமார் என பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் உலகலவில் ரூ.600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்பு தனது மகள் ஐஸ்வர்யா உடன் அமெரிக்கா சென்றார். தனது வழக்கமான உடல் பரிசோதனைக்காக அவர் அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது அமெரிக்காவில் முதன்முறையாக தனது முதல் செல்ஃபி வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
திறந்த காரில் செல்லும் நடிகர் ரஜினிகாந்த் செல்ஃபி தொடர்பாக தனது சந்தேகத்தை கேட்கிறார். அந்த வீடியோவில் பேசும் அவர் “ இந்த ரெட் பட்டனை தானே ஆன் பண்ணனும் என்று கேட்கிறார். மீண்டும் ஒரு முறை ரெட் பட்டன் தானே என்று உறுதிப்படுத்திக்கொள்ளும் ரஜினி, கேமராவை பார்த்து கியூட்டாக ஹாய் சொல்கிறார்.. இந்த வீடியோ இதுவரை 50,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு லைக்களும் குவிந்து வருகிறது.
“தென்னிந்திய சினிமாவே இப்படி தான்.. அதனால தான் அதில் அதிகமாக நடிப்பதில்லை..” நடிகை தமன்னா ஓபன் டாக்
இதனிடையே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் என்ற படத்தில் ரஜினி கேமியோ ரோலில் நடிக்கிறார். இப்படம் 2024, பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் பகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
