“தென்னிந்திய சினிமாவே இப்படி தான்.. அதனால தான் அதில் அதிகமாக நடிப்பதில்லை..” நடிகை தமன்னா ஓபன் டாக்
ஜெயிலர் படத்தின் இடம்பெற்றுள்ள காவாளா பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ட்ரெண்டான தமன்னா தற்போது தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார்.
பிரபல நடிகை தமன்னா, தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இதுவரை 75 படங்களுக்கும் மேல் நடித்துள்ள தமன்னா தனது நடிப்பு திறமைக்காக பிலிம் ஃபேர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். மேலும் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, தனுஷ் பிரபாஸ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். ஜெயிலர் படத்தின் இடம்பெற்றுள்ள காவாளா பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் ட்ரெண்டான தமன்னா தற்போது தமிழில் அரண்மனை 4 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹிந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
எனினும் தென்னிந்திய படங்களை விட தற்போது ஹிந்தி படங்களில் தமன்னா அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தான் ஏன் தென்னிந்திய சினிமாவில் இருந்து விலகி இருக்கிறேன் என்பது குறித்து தமன்னா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
tammanha
ஃபிலிம்பேர் உடனான உரையாடலில் பேசிய அவர் தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்க நச்சு நிறைந்துள்ளதாக கூறினார். மேலும் பேசிய அவர் “ தெற்கில், சில ஃபார்முலாக்கள் பயன்படுத்தப்படுகின்றன, ஏனெனில் அவை எளிதானவை. சில கமர்ஷியல் படங்களில், எனது கதாபாத்திரங்களுடன் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை, மேலும் இயக்குனரிடம் நான் தீவிரத்தை குறைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நச்சுத்தன்மை கொண்ட ஆண்மை கொண்டாடப்படும் இதுபோன்ற படங்களில் நடிக்காமல் இருக்க மனப்பூர்வமாக முயற்சி செய்யத் தொடங்கினேன்.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தென்னிந்திய படங்களுக்கு கிடைத்த வெற்றி ஏன் பாலிவுட் படங்களுக்கு கிடைக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த தமன்னா “ எனது பாலிவுட் பெரிதாக வெற்றி பெறவில்லை. நான் அதை ஒருபோதும் தனிப்பட்ட தோல்வியாக எடுத்துக் கொள்ளவில்லை, ஏனென்றால் ஒரு திரைப்படம் நிறைய பேர் பங்களிப்புடன் உருவாகிறது. அந்த வகையில் எனது வெற்றி தோல்விகள் இரண்டில் இருந்தும் சற்று ஒதுங்கி இருக்கிறேன்.எதையுமே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.” என்று தெரிவித்தார்.
tammannaah
தமன்னா கடைசியாக ஆக்ரி சாச் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார்.. இவர் அடுத்ததாக வேதா படத்தில் நடிக்கவுள்ளார். நிகில் அத்வானி இயக்கத்தில், ஜான் ஆபிரகாம், ஷர்வரி வாக், அபிஷேக் பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இது 2024 இல் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.