Asianet News TamilAsianet News Tamil

காட்டாறு... அவனுக்கு தடையும் கிடையாது கரையும் கிடையாது ஆக்ஷனில் பொறி பறக்கவிடும் 'அண்ணாத்த' டீசர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Rajinikanth)  'அண்ணாத்த' (Annaatthe) படத்தின் டீசர் தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

 

Rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe teaser released now
Author
Chennai, First Published Oct 14, 2021, 6:30 PM IST

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள, 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒருபுறம் பரபரப்பாக சென்று கொண்டிருக்க, மற்றொரு புறம் இந்த படத்தின் புரோமோஷன் பணிகளில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது.

மேலும் செய்திகள்: போதை மருந்து வழக்கு... பொது சிறைக்கு மாற்றப்பட்ட ஷாருகான் மகன் ஆர்யன் கான்!!

அந்த வகையில் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பல படங்களில் பின்னணி பாடியுள்ள பாடும் நிலா எஸ்.பி. பி, கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காகவே, 'அண்ணாத்த' படத்தில் பாடிய அறிமுக பாடலான 'அண்ணாத்த அண்ணாத்த' பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாவது பாடலான 'சார காற்றே' பாடல் அக்டோபர் 9 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe teaser released now

இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு 'அண்ணாத்த' பாத்தின் டீசர் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி தலைவர் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்: பாவாடை தாவணியில் தலை நிறைய மல்லி பூ... ஹோம்லி லுக்கில் புன்னகை பூவாய் போஸ் கொடுத்த இந்துஜா..!

 

Rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe teaser released now

திருவிழா கொண்டாட்டத்தோடு துவங்கும் இந்த டீசர் இறுதியில் அதிரடி ஆக்ஷன் காட்சியில் முடித்துள்ளது. அதே போல் தலைவரின் படம் என்றால் பன்ச் டயலாகுக்கு குறைவிருக்காது. இந்த படத்திலும் அப்படி சில வசனங்கள் இடம்பெற்றுள்ளது, ஆரம்பத்திலேயே "கிராமத்தான குணமா தான பாத்திருக்க, கோவப்பட்டு பார்த்தது இல்லையே... என்கிற வசனம், காட்டாறு அவனுக்கு கரையும் கிடையாது தடையும் கிடையாது என்று அடுத்தடுத்து பேசும் டயலாக்குகள் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது.

மேலும் செய்திகள்: கொசுவலை போன்ற கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... தினுசு தினுசா போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஓவியா!!

 

Rajinikanth nayanthara keerthy suresh starring annaatthe teaser released now

அதே போல் இந்த படத்தில் அதிரடி காட்சிகளுக்கு குறைவிருக்காது என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. தீபாவளிக்கு பட்டாசு பொறி பறக்கின்றதோ... இல்லையோ திரையரங்கில் தலைவர் படத்தில் வேற லெவலுக்கு பொறி பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. மேலும் இமான் இசை வேறு லெவலுக்கு உள்ளது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்ட மிப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios