போதை மருந்து வழக்கு... பொது சிறைக்கு மாற்றப்பட்ட ஷாருகான் மகன் ஆர்யன் கான்!!
ஷாருக்கானின் (Shah rukh khan) மகன் ஆர்யன் கான் (Aryan Khan) , போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் கொரோனா பரிசோதனை (covid 19 test) செய்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பொது சிறைக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுநாள் வரை ஆர்தர் சாலை சிறையின், தனிமைப்படுத்தப்பட்ட அறையில் இருந்த ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், கொரோனா பரிசோதனை சோதனை செய்த பின்னர் பொது சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் ஆர்யன் கானுடன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற நபர்களும் சிறையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்தர் சாலை சிறை கண்காணிப்பாளர் நிதின் வேச்சால், ஆர்யா கான் மற்றும் 5 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து பொது அறைக்கு மாற்றப்பட்டனர் என்று உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஷாருக்கான் மற்றும் கௌரிகானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மும்பை நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது, ஏற்கனவே இரண்டு முறை இவரது ஜாமீன் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது முறையாக விசாரணைக்கு வர உள்ளது.
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம், ஆர்யன் கான் வெளிநாட்டை சேர்ந்த போதை மருந்து விற்பவர்களிடம் தொடர்பு கொண்டிருந்ததாக குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் கப்பலில் நடத்தப்பட்ட சோதனையின் போது எவ்வித போதை மருந்தும் இல்லை.
இந்த வழக்கை தற்போது நடத்தி வரும் அமித் தேசாய், ஆர்யன் கண்ணுக்கும் போதைப்பொருட்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவரிடம் இருந்த எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஷாருகான் மகனின் போதை மருந்து வழக்கில் பல பிரபலங்கள் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவது குறிபிடத்தக்கது.