பாவாடை தாவணியில் தலை நிறைய மல்லி பூ... ஹோம்லி லுக்கில் புன்னகை பூவாய் போஸ் கொடுத்த இந்துஜா..!
"மேயாத மான்" (Meyaatha Maan) படத்தி மூலம் அறிமுகமான இந்துஜா (Indhuja) , தற்போது பிங்க் கலர் பாவாடை தாவணியில் (Half Saree Look) பளீச் புன்னகையோடு வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ...
பக்கா தமிழ் பெண்ணான இந்துஜா சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக, விடாப்பிடியாக இருந்து தற்போது வளரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்.
'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா, பின்னர் 'மெர்குரி', 'பூமராங்', 'மகாமுனி' உள்ளிட்ட பல படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.
தளபதி' விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் கால்பந்து வீராங்கனையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது இவரது கை வசம் காக்கி என்கிற திரைப்படம் மட்டுமே உள்ள நிலையில், பட வாய்ப்புகளை பிடிக்க அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
கவர்ச்சி ரூட்டுக்கு அடி போட்டு வந்தாலும், அவ்வப்போது ஒரு தமிழ் பெண்ணாக பாவாடை தாவணி, புடவை என கலாச்சார உடைகளில் மின்னுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் லைட் பிங்க் நிற பாவாடை தாவணியில், தலை நிறைய மல்லி பூ வைத்து, புன்னகை பூவாக இவர் ஜொலிக்கும் புகைப்படங்கள் சில இதோ...
என்ன தான் மாடர்ன் டிரஸ் போட்டாலும் இந்த பாவாடை தாவணியில் இவரது அழகை தாறுமாறாக புகழ்ந்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
குறிப்பாக பெரிதாக எந்த ஒரு மேக்கப் மற்றும் ஜொலிஜொலிக்கும் நகைகள் இல்லமால், இவரது அழகுக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது இவரது புன்னகை எனலாம்.