கொசுவலை போன்ற கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... தினுசு தினுசா போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றிய ஓவியா!!
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஓவியா, தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் புடவையில் தெறிக்க விட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா.
இதை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்றாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி இவர் சற்றும் எதிர்பார்க்காத வரவேற்பை இவருக்கு பெற்று தந்தது .
சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். இவருக்காக தான் பல ரசிகர்கள் முதலில் ஆர்மியும் துவங்கினர்.
யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது
அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... செய்து வைத்த சிலை போல் இவர் கொடுத்துள்ள போஸ், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.