ரஜினி பட இசையமைப்பாளர் காலமானார்.. பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்..

பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். 

Rajinikanth movie Naan Adimai illai music director vijay anand passed away Rya

80களில் தமிழ் திரையுலகில் பிரபலமாக இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.  ரஜினி நடிப்பில் வெளியான நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை, காவலன் அவன் கோவலன், ராசாத்தி வரும் நாள் உள்ளிட்ட பல படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த பல பாடல்கள் அந்த காலக்கட்டத்தில் ஹிட்டானது. குறிப்பாகவிஜய் ஆனந்த் இசையில் உருவான ஒரு ஜீவன் தான் உன் பாடல் என்ற ரஜினி பாடல் அந்த காலக்கட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. 

தமிழில் 10 படங்களுக்குக் மேல் இசையமைத்துள்ள அவர் கன்னடத்தில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். தமிழில் விசு இயக்கும் படங்களுக்கு பெரும்பாலும் விஜய் ஆனந்த் தான் இசையமைத்துள்ளார். மேலும் பிரபுவின் வெற்றி மேல் வெற்றி, ஊருக்கு உபதேசம், வாய்ச்சொல்லில் வீரரடி போன்ற படங்களுக்கு அவர் இசையமைத்துள்ளார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக விஜய் ஆனந்த் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71. உயிரிழந்ததுள்ளார். அவரின் மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இளையராஜா கோலோச்சி வந்த அந்த காலக்கட்டத்தில் பல இசையமைப்பாளர்கள் அறிமுகமானார். ஆனால் இளையராஜா அப்போது தனது இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தார். அப்போது வேறு சில இசையமைப்பாளர்கள் இசையமைத்த பல் பாடல்களும் இளையராஜா இசையமைத்ததாகவே கருதப்பட்டது. அதில் விஜய் ஆனந்த் ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் பாடலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios