கொரோனா வைரஸ் தொற்று, இந்தியா முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை தடுக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக சமூக இடைவேளையை பின்பற்ற வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

அதன் படி,  ஏப்ரல் மாதமே முடிவடைய வேண்டிய ஊரடங்கை,  பிரதமர் மோடி, மே 3 ஆம் தேதி வரை, நீடித்துள்ளார். மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியில் செல்லும் போது கூட, சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம் என்றும், முகத்தில் மாஸ்க் போட்டு கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் என்றும் மருத்துவர்களும், சுகாதார துறை அதிகாரிகளும் கூறி வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன்,  'தாய் வீடு' படத்தில்  கதாநாயகியாக நடித்த நடிகை அனிதா ராஜ் மற்றும் பல பாலிவுட் திரைபிரபலங்கள்,  மும்பையில் உள்ள அனிதா ராஜின் இல்லத்தில் பார்ட்டி செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்: ஊரடங்கில் புது பழக்கத்திற்கு அடிமையான ஐஸ்வர்யா ராஜேஷ்! அவரே வெளியிட்ட தகவல்!
 

பின்னர் இது குறித்து அறிந்த மும்பை காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இதுகுறித்து விளக்கம் அளித்த  அனிதா ராஜ் "என் கணவர் ஒரு மருத்துவர். அவரது நண்பர் ஒருவருக்கு மருத்துவ அவசரநிலை ஏற்பட்டது. எனவே அவர் தனது மனைவியுடன் வந்தார். என்கணவரும் மருத்துவ உதவி வழங்கினார். எனது கணவர் மனிதாபிமான அடிப்படையில் மறுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: விபச்சார வழக்கில் கைது... 10 மாதத்தில் விவாகரத்து..! இப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு!
 

பின்னர் போலீசார் பொய்யான புகாரினால் அதிர்ச்சி அடைந்து, நடிகை அனிதா ராஜ் மற்றும் அவருடைய கணவரிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.