திரையுலகில் நடிகையாக வேண்டும் என்கிற கனவோடு, சின்னத்திரையில் தொகுப்பாளியாக உள்ளே நுழைந்தவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக தெலுங்கில் ஒரு படத்திலும், தமிழில் உயர் திரு 420 , சட்டப்படி குற்றம், விளையாடவா, போன்ற படங்களில் நடித்தாலும் இவர் கண்டுகொள்ளப்படாத நடிகையாவே இருந்தார்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 'அட்டகத்தி' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த படம், இவருக்கு ஒரு சிறந்த அறிமுகப்படமாக அமைந்தது. நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர், நடித்த ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் இவருக்கு நாயகிக்கான அங்கீகாரத்தை கொடுத்தது.  

மேலும் செய்திகள்: சிரஞ்சீவி சவாலை கண்டுகொள்ளாத சூப்பர் ஸ்டார்! கடுப்பேற்ற களத்தில் இறங்கிய தெலுங்கு பிரபலங்கள்!
 

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான  "காக்கா முட்டை" படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.  வழக்கமாக டூயட் பாடவே விரும்பும் ஹீரோயின்களுக்கு மத்தியில், இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்படவைத்தார். 

தொடர்ந்து விக்ரம், தனுஷ், விஜய்சேதுபதி உள்ளிட்ட பெரிய ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ்,மகளிர் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட "கனா" படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாகவே வாழ்ந்து விருதுகளையும், ரசிகர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.
அதுமட்டுமல்லாமல்,சிவகார்த்தியேன் நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் அவரது தங்கையாக நடித்திருந்தார். 

மேலும் செய்திகள்: விபச்சார வழக்கில் கைது... 10 மாதத்தில் விவாகரத்து..! இப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு!
 

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வர கலர் முக்கியமல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்தியவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற  அளவான அழகில் தமிழில் சினிமாவில் கலக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தெலுங்கிலும் கலக்கி வருகிறார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படத்தின் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தற்பட்டது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, வீட்டிலேயே இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'லுடோ' விளையாட்டிற்கு அடிமையாகி விட்டாராம். இதனால் எந்நேரமும் கையில் போனுடன் தான் இந்த ஊரடங்கு ஓய்வை கழித்து வருகிறார் போல. அதே நேரத்தில் தன்னை போலவே யாரெல்லாம் இந்த விளையாட்டுக்கு அடிமை என கேட்டு, 'லுடோ'விளையாடும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் இதோ: