உலக நாடுகளை அடுத்து, இந்தியாவில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மே 3ம் தேதி வரை, மத்திய மற்றும் மாநில அரசுகள், இரண்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. 

இதனால் வெளியில் எங்கும் செல்லமுடியாமல்,  வீட்டிலேயே முடங்கியுள்ள திரைப்பிரபலங்கள் புதுசு, புதுசாக சவால்களை உருவாக்கி அதனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா ட்விட்டர் மூலம் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலிக்கு சவால் ஒன்றை விடுத்தார். 

#BetheREALMAN என்ற அந்த சவாலின் படி லாக்டவுன் நேரத்திலாவது தங்களது மனைவிக்கு, வீட்டு வேலைகள் செய்து  உதவ வேண்டும். மேலும் வீட்டு வேலைகள் செய்த அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட வேண்டும் என்பது தான். 

மேலும் செய்திகள்: விபச்சார வழக்கில் கைது... 10 மாதத்தில் விவாகரத்து..! இப்போது மனநலம் பாதிக்கப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு!
 

இந்த சவாலை ஏற்று கொண்ட, இயக்குனர் ராஜமெளலி அந்த சவாலை ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரணுக்கு விடுத்தார். இதையடுத்து வீட்டை துடைப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற வேலைகளை அவர்களும் செய்து முடித்த கையேடு ஜூனியர் என்.டி.ஆர்., இதேபோன்று வீட்டு வேலைகளை செய்யும் படி தெலுங்கு திரையுலகில் டாப் ஸ்டார்களான சிரஞ்சீவி, வெங்கடேஷ், நாகார்ஜுனா ஆகியோருக்கு சவால் விட்டார். 

அதன் படி இந்த சவாலை ஏற்றுக்கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி, வீட்டை சுத்தப்படுத்தி, தன் கையால் தோசை சுட்டு தனது அம்மாவிற்கு கொடுக்கும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் இந்த சவாலை தனது நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நிறைவேற்ற வேண்டும் என்று ட்விட்டர் மூலமாக கோரிக்கைவிடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்: ஜோதிகா அப்படி பேசியது ஏன்? உண்மை பின்னணியை போட்டுடைத்த இயக்குனர்!
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த சவாலை ஏற்பாரா?, தனது வீட்டை சுத்தம் செய்யும் வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்வாறா? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில் அவர் அதனை சற்று கண்டுகொள்ளவில்லை.

 

 

ஆனால் ஜூனியர் என்.டி.ஆர். விட்ட சவாலை ஏற்றுக்கொண்ட வெங்கடேஷ், தன்னுடைய வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது என சவாலை ஏற்று கொண்டு களத்தில் இறங்கி கலக்கியுள்ளர். இதை தொடர்ந்து, இயக்குனர் கொரட்டலா சிவா போன்ற முன்னணி இயக்குனர்களும் வீட்டு வேலை செய்துள்ள வீடியோவை வெளியிட அது தற்போது வெளியிட தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார், அன்பாக விடுத்த கோரிக்கையை இதுவரை சூப்பர் ஸ்டார் ஏற்றுக்கொள்ள வில்லை என்றாலும், அவரை கடுப்பேற்றுவது போல், தெலுங்கு பிரபலங்கள் போட்டி போட்டு சவாலை எதிர்கொண்டு வருகிறார்கள்.