விபச்சார வழக்கில் கைதாகி, பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை ஸ்வேதா பாசு, தற்போது தனக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக, கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் ஸ்வேதா பாசு. மும்பையை சேர்ந்த இவர் பின்னர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழி  படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். 'மக்டே' எனும் இந்திப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார். தொடர்ந்து ஏராளமான தெலுங்கு படங்களிலும் ஸ்வேதா நடித்தார். இதன் மூலம் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் வலம் வந்தார்.

தமிழில் நடிகர் உதயாவுடன் ‘ராரா’, ‘ஒரு முத்தம்  ஒரு யுத்தம்’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களிலும் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். 

மேலும் செய்திகள்: ஜோதிகா அப்படி பேசியது ஏன்? உண்மை பின்னணியை போட்டுடைத்த இயக்குனர்!
 

இந்த நிலையில் திரைப்பட வாய்ப்புகள் குறைந்ததால், சொகுசு வாழ்க்கைக்காக பாலியல் தொழிலில் ஈடுபட துவங்கினர். அந்த வகையில் கடந்த 2014ம் ஆண்டு ஐதராபாத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில், போலீசார் நடத்திய திடீர் ரெய்டில்  பாலியல் தொழில் ஈடுபட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசுவை அதிரடியாக கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வேதா பாசுவை பெண்கள் சீர்திருத்த மையத்திற்கு, அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இதன் பிறகு அங்கு சில மாதங்கள் இருந்த ஸ்வேதாவுக்கு ஜாமீன் கிடைத்தது. விபச்சார வழக்கை தொடர்ந்து நடத்திய ஸ்வேதா அந்த வழக்கில் இருந்து நிரபராதி என்று விடுதலை பெற்றார். ஸ்வேதா விபச்சாரம் செய்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

இந்த சர்ச்சைக்கு பிறகு ஸ்வேதாவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தது. தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும், இந்தி சீரியல்களிலும் ஸ்வேதா பிசியானார். 

இந்த நிலையில் இயக்குனர் ரோஹித் மிட்டால் என்பவரை காதலித்து வந்த ஸ்வேதா,  கடந்த 2018 ஆண்டு, மும்பையில் ஸ்வேதா – ரோஹித் திருமணம் கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்தது. 

இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், ஸ்வேதா பாசு - ரோஹித் மிட்டாலுடன் மனம் ஒற்று விவாகரத்து பெற உள்ளதாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: ரஜினியா விஜய்யா? அதிகம் நிதி கொடுத்தது யார்? ரசிகர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில்  நண்பனையே கொலை செய்த கொடூரம் !
 

இதை தொடர்ந்து, இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்த நிலையில், தற்போது தனிமை தன்னுடைய மனநலத்தை பாதித்துவிட்டதாக கூறி அதிர்ச்சியடைய வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் நான் தனிமையில் இருந்ததே இல்லை. சிறிய வயதில் பெற்றோருடன் இருந்தேன். திருமணத்திற்கு பின் கணவருடன் இருந்தேன். விவாகரத்து பெற்ற தனியாக இருந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் வெளியில் செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன்.

ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியில் எங்கும் செல்ல முடியாமல் தனிமையில் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. இது என்னுடைய மனநலத்தை பாதித்துள்ளது என்றும், இதற்கு வீடியோ கால் மூலம் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வருவதாகவும் நடிகை ஸ்வேதா பாசு தெரிவித்துள்ளார்.