பிலிம் சிட்டி நிறுவனர் ராமோஜி ராவ் மறைவால் மனமுடைந்துபோன ரஜினிகாந்த், அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டு உள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் நிறுவனரான ராமோஜி ராவ் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். தென்னிந்தியாவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய முன்னணி ஸ்டூடியோவாக திகழ்ந்து வரும் ராமோஜி ராவ் ஸ்டூடியோ கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஸ்டூடியோவில் தெலுங்கு மட்டுமின்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களும் படமாக்கப்பட்டன.
இத்தகைய பெருமைமிக்க இந்த பிலிம் சிட்டிக்கு சொந்தக்காரரான ராமோஜி ராவ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் ஐதராபாத்தில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படியுங்கள்...உலகின் மிகப்பெரிய ஸ்டூடியோ நிறுவனர்.. மேலும் பல பிசினஸ்.. ராமோஜி ராவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு..
ராமோஜி ராவின் மறைவு தென்னிந்திய திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் எக்ஸ் தளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ராமோஜி ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில், என்னுடைய குரு, நலம் விரும்பி ராமோஜி ராவ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு முகுந்த வேதனை அடைந்தேன். சினிமாவிலும் பத்திரிகை துறையில் சாதனை படைத்தவர், அரசியலில் கிங் மேக்கராக திகழ்ந்தவர். என்னுடைய வழிகாட்டியாக இருந்தவர், என் வாழ்வில் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன், அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... RamojiRao: பாகுபலி உள்பட பல பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்பட்ட பிலிம் சிட்டியின் உரிமையாளர் ராமோஜி ராவ் காலமானார்
