RamojiRao: பாகுபலி உள்பட பல பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்பட்ட பிலிம் சிட்டியின் உரிமையாளர் ராமோஜி ராவ் காலமானார்

ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற படப்பிடிப்பு தளமான ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் உரிமையாளர் ராமோஜி ராவ் உடல் நலக்குறைவால் காலமானார்.

Hyderabad Ramoji Rao Film city founder Passed Away gan

ஐதராபாத்தில் உள்ள புகழ்பெற்ற படப்பிடிப்பு தளம் தான் ராமோஜி ராவ் பிலிம் சிட்டி. ஒரு காலத்தில் ஏவிஎம் ஸ்டூடியோ எந்த அளவு பேமஸ் ஆக இருந்ததோ, அதே அளவு பெயரும் புகழும் பெற்ற ஸ்டூடியோவாக ராமோஜி ராவ் பிலிம் சிட்டி திகழ்ந்து வருகிறது. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், புஷ்பா உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களின் படப்பிடிப்பு இங்கு தான் நடத்தப்பட்டது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த ஸ்டூடியோ கடந்த 1996-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராமோஜி ராவ் என்பவர் தான் இந்த ஸ்டூடியோவை தொடங்கினார். நடிகர் விஜய்யின் வாரிசு, அஜித் நடித்த துணிவு, வலிமை, ரஜினியின் அண்ணாத்த போன்ற படங்கள் இந்த பிலிம் சிட்டியில் தான் படமாக்கப்பட்டன.

இதையும் படியுங்கள்... Kollywood : கங்குவா.. விடாமுயற்சி.. பெரிய தலைகளுடன் மோதுகிறாரா கவின்? - இந்த வருட தீபாவளி ரிலீஸ் ஒரு பார்வை!

இத்தகைய பெருமைமிக்க இந்த பிலிம் சிட்டியை உருவாக்கிய ராமோஜி ராவ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமோஜி ராவ் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார்.

ராமோஜி ராவின் மறைவு திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரின் மறைவுக்கு தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஈ நாடு என்கிற பத்திரிகையையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... இரு வேடங்களில் அருண் விஜய்.. விறுவிறுப்பான படப்பிடிப்பில் "ரெட்ட தல" - படக்குழு தந்த லேட்டஸ்ட் அப்டேட்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios