அச்சு அசல் ரஜினியை போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ஒரே நடிகர் என்றால் அது ரஜினி காந்த் தான். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருக்கும்டிகர் ரஜினிக்கு, தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினிகாந்தின் ஜெயலர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மோகன் லால், ஜாக்கி ஷெரஃப், ஷிவ்ராஜ்குமார் என பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்த படம் உலகலவில் ரூ.600 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

ஜெய்பீம் படத்தை இயக்கிய டி.ஜெ. ஞானவேல் இயக்கத்தில் தனது 170-வது படத்தில் நடிக்க உள்ளார். இப்படடத்தில் அமிதாப் பச்சன், ராணா டகுபதி, பகத் ஃபாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் ரஜினி பிசியாக இருக்கிறார். கேரளா, திருநெல்வேலியில் இபடத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.

Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த நிலையில் அச்சு அசல் ரஜினியை போலவே இருக்கும் ஒரு நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் ரஜினியை போலவே உடல் தோற்றத்துடன், தலையை கோதுவது, பேசுவது என ரஜினியை போலவே இருக்கிறார். ஒரு சில ரசிகர்கள், அவரை ரஜினி என நினைத்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அவர் ரஜினி இல்லை என்று சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Scroll to load tweet…

ரஜினியை போலவே இருக்கும் இந்த நபர் சுதாகர் பிரபு என்பதும் அவர் கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு ஸ்டாலில் டீ விற்று வருகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் அதே நேரம் ரஜினிக்கும் அவருக்கும் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்து பலரும் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால் அந்த நபர் இணையத்தில் ஓவர்நைட்டில் சென்சேஷனாக மாறி உள்ளார்.

மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் – இந்த கிரகத்தில் எளிமையான மனிதர் – ரஜினியை சந்தித்த இர்பான் பதான்!

இதனிடையே ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.