Asianet News TamilAsianet News Tamil

என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! 33 வருடங்களுக்கு பின்.. அமிதாப் பச்சனுடன் இணைவது பற்றி ரஜினி போட்ட ட்வீட்

தலைவர் 170 படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் இணைந்து நடிப்பது குறித்து, மிகவும் உருக்கமாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
 

Rajinikanth expose the happiness After 33 years working again with Amitabh Bachchan mma
Author
First Published Oct 25, 2023, 12:43 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் ரூ .600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தின் ஹிஸ்டாரிக் வெற்றியால், உற்சாகமான சன் பிச்சர்ஸ் நிறுவனம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப் குமார், மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு சுமார் 1 கோடி மதிப்புள்ள சொகுசு காரை பரிசாக வழங்கியது மட்டும் இன்றி குறிப்பிட்ட தொகையையும் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

Rajinikanth expose the happiness After 33 years working again with Amitabh Bachchan mma

லைகாவிடம் சிபாரிசு... ஜேசன் சஞ்சய்யை இயக்குனராக்க விஜய்யை விட அதிகம் ரிஸ்க் எடுத்தது இவர்தானாம்

'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, தன்னுடைய மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் ரஜினி. இதை தொடர்ந்து இமயமலைக்கு ஆன்மீக பணயம் சென்று வந்த ரஜினி, இந்த மாதம் துவங்கப்பட்ட, 'தலைவர்' 170 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். ரஜினி நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கி வருகிறார். 

லைகா நிறுவனம் இந்த படத்தை மிகப்பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படம் என்கவுண்டரருக்கு எதிரான, உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட உள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர் - நடிகைகள் குறித்த அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதன்படி துஷாரா விஜயன், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், ஆகியோர் நடிப்பது உறுதியானது. இதை தொடர்ந்து ரானா டகுபதி, அமிதாப் பச்சன், பஹத் பாசில் ஆகியோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

Rajinikanth expose the happiness After 33 years working again with Amitabh Bachchan mma

பெருமிதம் கொள்கிறேன்!! விஜயதசமி நாளில்... FEMI9 எனும் புதிய தொழிலை பெண்களுக்காக துவங்கிய நயன்தாரா!

ரஜினிகாந்த் அமிதாப் பச்சனுடன் இணைந்து, சுமார் 33 வருடங்களுக்கு பின்னர் இப்படத்தில் நடிப்பது குறித்து... துள்ளலான மகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது... "33 ஆண்டுகளுக்குப் பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் லைகாவின் "தலைவர் 170" படத்தில் எனது வழிகாட்டியான ஸ்ரீ அமிதாப் பச்சனுடன் மீண்டும் பணியாற்றுகிறேன். என் இதயம் மகிழ்ச்சியில் துடிக்கிறது! என கூறியுள்ளார்".  இதற்க்கு முன்னர் இயக்குனர் பிரயாக் ராஜ் இயக்கத்தில் வெளிவந்த, 'ஜிராப்டர்' என்கிற படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடன் கமலஹாசனும் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios