பெருமிதம் கொள்கிறேன்!! விஜயதசமி நாளில்... FEMI9 எனும் புதிய தொழிலை பெண்களுக்காக துவங்கிய நயன்தாரா!
நடிகை நயன்தாரா நடிப்பை தாண்டி பிஸினஸில் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது பெண்களுக்காக புதிய பிஸ்னஸ் ஒன்றை துவங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Actress Nayanthara
திருமணத்திற்கு பின்னரும், ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகையாகவும்... பல முன்னணி நடிகர்கள் ஜோடி போட ஆசைப்படும் நடிகையாக இருக்கும் நயன்தாரா, தமிழில் ஒரு படத்தில் நடிக்க 3 முதல் 5 கோடி வரை சம்பளமாக பெற்று வந்த நிலையில், பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்ததும் தன்னுடைய சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தினார்.
அந்த வகையில் சமீபத்தில் அட்லீ இயக்கத்தில், ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த 'ஜவான்' படத்திற்காக, 10 கோடி சம்பளமாக பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்திற்கு, 15 கோடி வரை சம்பளமாக கேட்பதாக கூறப்படுகிறது. தமிழில் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் தொடர்ந்து லைம் லைட்டில் இருப்பதால், மும்பை விட சம்பளத்தை ஏற்றி கேட்கிறாராம்.
Femi 9
மேலும் இப்படி சம்பாதிக்கும் பணத்தை... கணவர் விக்கியுடன் டிஸ்கஸ் செய்து, பல நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே நயன் ரியல் எஸ்டேட்டில் ஏகப்பட்ட பணத்தை முதலீடு செய்துள்ள நிலையில், இதை தொடர்ந்து, ரவுடி பிச்சர்ஸ், சாய் என்கிற ஸ்டேர் நிறுவனம், லிப் பாம் நிறுவனம், 9ஸ்கின் என்கிற அழுகு சாதனா பொருட்கள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். கடந்த மாதம் தான் 9ஸ்கின் நிறுவனத்தை மலேசியாவில் நயன் - விக்கி லான்ச் செய்தனர்.
Nayanthara
இதை தொடர்ந்து, தற்போது மற்றொரு புதிய பிஸ்னஸில் கால் பதித்துள்ளார் நயன்தாரா. Femi9 என்கிற நாப்கின் தயாரிக்கும் நிறுவனந்தை தான் துவங்கியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன் தெரிவித்துள்ளதாவது, "பெருமிதம் கொள்கிறேன்!! இந்த விஜயதசமி திருநாளில் FEMI9 எனும் புதிய பயணத்தை தொடங்குவதில் பெருமை கொள்கிறேன்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Vignesh Shivan
தனிமனித சுகாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த Femi9 ஒரு பிராண்ட் மட்டுமல்ல; இது ஒவ்வொரு பெண்ணின் வலிமை மற்றும் அழகுக்கான ஒரு அடையாளமாகும். பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இந்த முயற்சியைக் கொண்டாட என்னுடன் இணையுங்கள்! ஒருவரையொருவர் ஆதரிப்போம், இணைந்து உயர்வோம் என பதிவிட்டுள்ளார். நயன்தாராவின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.