நடிகராக அவதாரம் எடுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரரான கோதரர் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட், திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

Rajinikanth brother Sathyanarayana Rao Gaikwad debut in tamil movie


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இந்தியாவில் எப்படி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் தலைவரின் படங்கள் கெத்து காட்டுகிறதோ... அதே போல் வெளிநாட்டிலும் வேற லெவல் வரவேற்பை பெற்று வருகிறது. 

தலைவரை தொடர்ந்து அவரின் இரு மகள்களுமே திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது, ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, 'லால் சலாம்' படத்தை இயக்கி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து, எடுக்கப்பட்டுவரும் இப்படத்தில் மொய்தீன் பாய் என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார். மேலும் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகன் தனுஷ் மற்றும் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் கணவர் விசாகன் ஆகிய இருவருமே நடிகர்களாவர்.

கண்ணே பட்டுடும்.. அவ்வளவு அழகு! விஜய் டிவி தீனா - பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்! வைரலாகும் கிளிக்ஸ்!

Rajinikanth brother Sathyanarayana Rao Gaikwad debut in tamil movie

இவர்களை தவிர ரஜினிகாந்த் குடும்பத்தில் இருந்து இதுவரை யாரும் நடிகராக திரையுலகில் காலடி எடுத்து வைக்காமல் இருந்த நிலையில், தற்போது ரஜினிகாந்தின் சகோதரர்  சத்யநாராயண ராவ் கெய்க்வாட், தன்னுடைய  80 வயதில்,  நடிகராக அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுளளது. இன்னும் பெயரிடப்படாத தமிழ் படத்தில் இவர் நடிக்க உள்ளதாகவும், கிருஷ்ணகிரியில் முஹுரத் பூஜைக்கு பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

'ஜெயிலர்' படப்பிடிப்பு நிறைவு..! தமன்னாவுடன் சேர்ந்து உற்சாகமாக கேக் கட் பண்ணிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Rajinikanth brother Sathyanarayana Rao Gaikwad debut in tamil movie

பள்ளியில் பட்டம் வாங்கிய விஜய் மகள் திவ்யா! மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த குட்டி தளபதி சஞ்சய்! வீடியோ

சத்யநாராயண ராவ் கெய்க்வாட், ரஜினிகாந்தின் சகோதரர் என்பதனாலேயே மிகவும் பிரபலமான ஒருவராக அறியப்படுகிறார். ரஜினிகாந்த் குடும்பம், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்த போது... தன்னுடைய தம்பியின் ஆசையை நிறைவேற்ற பல கஷ்டங்களை சுமந்தவர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட். அதே போல் ரஜினிகாந்த் தன்னுடைய சகோதரரை தந்தைக்கு நிராகர பார்த்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios