பள்ளியில் பட்டம் வாங்கிய விஜய் மகள் திவ்யா! மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த குட்டி தளபதி சஞ்சய்! வீடியோ
தளபதி விஜயின் மகள் திவ்யா ஷாஷா பள்ளி படிப்பை முடித்துள்ள நிலையில், அவருக்கு ஜேசன் சஞ்சய் மாலை அணிவித்து, வாழ்த்திய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருப்பவர் தளபதி விஜய். இவருடன் இணைந்து ஒரு படத்தில் ஆவது பணியாற்றி விட வேண்டும் என்பது பல இயக்குனர்களின் கனவு. அதே போல் விஜய்யுடன் ஒரு சீனிலாவது நடிக்க வேண்டும் என்பதை பல இளம் நடிகைகள் ஓப்பனாகவே கூறியுளளனர். தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில், இப்படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து, தன்னுடைய 68வது படத்தை விஜய் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விஜய்யின் அடுத்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள நிலையில், கல்பாத்தி அகோரம் தயாரிக்க உள்ளது. மேலும் இப்படத்தில், கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக விஜய் ரசிகர்கள் தளபதி விஜய் பற்றிய எந்த தகவல் வெளியானாலும் எப்படி சமூக வளையதளத்தில் வைரலாகி விடுகிறார்களோ அதே போல், அவருடைய குழந்தைகளான ஜேசன் சஞ்சய் மற்றும் திவ்யா ஷாஷா பற்றிய செய்திகள் வெளியானால் சொல்லவா வேண்டும்..?. இந்நிலையில் விஜய்யின் மகள் திவ்யா ஷாஷா இந்த ஆண்டு தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துள்ள நிலையில், அவருக்கு அவர் படித்து வரும் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடத்தியுள்ளனர். இதில் திவ்யாவின் சகோதரரான ஜேசன் சஞ்சய் தங்கைக்கு மாலை அணிவித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பள்ளி விழாவில் நடந்த நிகழ்ச்சியில் ஜேசன் சஞ்சய் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஜேசன் சஞ்சய் தற்போது கனடாவில், சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை படித்து முடித்துள்ள நிலையில், குறும்படங்கள் சிலவற்றையும் இயக்கியுள்ளார். மேலும் அவரை நடிக்க வைக்க சில முன்னணி இயக்குனர்கள் முயற்சி செய்த போதிலும், நடிகராவதை விட திரைப்பட இயக்கத்தின் மீது தான் அதிக ஆர்வம் இருப்பதாக வந்த வாய்ப்புகளை எல்லாம், ஜேசன் சஞ்சய் ஏற்கவிலை என கூறப்படுகிறது. மேலும் இவரின் படிப்பு இந்த ஆண்டுடன் முடிவடைந்துவிட்டதால், இந்தியா திரும்பியதும் திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.
திவ்யா சாஷாவும் இந்த ஆண்டு தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து விட்டதால், அண்ணனைப் போலவே கனடா நாட்டில் தன்னுடைய மேல்படிப்பை தொடர உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஏற்கனவே ஒரு சில கல்லூரிகளில் சங்கீதா தன்னுடைய மகளுக்கு அப்லே செய்துள்ளதாக கூறப்படுகிறது.திவ்யா ஏற்கனவே தந்தை விஜய்யுடன் தெறி படத்தில் நடித்துள்ள நிலையில், சினிமா சம்பந்தமான படிப்பை தேர்வு செய்து பிடிப்பாரா? அல்லது எந்த மாதிரியான துறையை தேர்வு செய்வார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
திவ்யா சாஷாவின் பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஜேசன் சஞ்சய் கலந்து கொண்ட வீடியோ இதோ: