கண்ணே பட்டுடும்.. அவ்வளவு அழகு! விஜய் டிவி தீனா - பிரகதியின் வெட்டிங் போட்டோஸ் ஷூட்! வைரலாகும் கிளிக்ஸ்!
'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தீனாவின்... வெட்டிங் போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது.
சினிமா மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக, சொந்த ஊரான திருவாரூரில் இருந்து சென்னை வந்து, துணை இயக்குனராக தன்னுடைய பணியை, பின்னர் துணை இயக்குனராக பணியாற்றிய கலக்கப்போவது நிகழ்ச்சியிலேயே போட்டியாளராகவும் களமிறங்கி, சரத்துடன் சேர்ந்து காமெடியில் தெறிக்கவிட்டார் தீனா.
சரத் - தீனா ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. விஜய் டிவி பிரபலங்களை தன்னுடைய தாறுமாறான கமண்ரியால்... கலாய்த்து தள்ளிய தீனா, மெல்ல மெல்ல திரைப்படங்களின் வாய்ப்புகளையும் பெற துவங்கினார். அதே போல் விஜய் டிவி தொலைக்காட்சியில் காமெடியன் என்பதை தாண்டி டிடியுடன் இணைந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அளவிற்கு உயர்ந்தார் தீனா.
தர்ஷன் - கீர்த்தி பாண்டியன் நடித்த 'தும்பா' படத்தில் குணச்சித்திர நடிகராக நடித்த தீனா, பின்னர் கைதி, மாஸ்டர், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க துவங்கினார். அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் தீனாவுக்கு இன்று அவருடைய சொந்த ஊரான திருவாரூரில் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தில் விஜய் டிவி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தீனா - பிரகதி ஜோடிக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தான் சொந்த ஊரில், பெற்றோரின் ஆசையை நிறைவேற்றும் விதமாக பிரமாண்டமான வீட்டை கட்டிய தீனா, இதை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு லைபிலும் செட்டில் ஆகியுள்ளார்.
தீனா திருமணம் செய்துகொண்டுள்ள பிரகதி, கிராபிக் டிசைனராக பணியாற்றி வருகிறாராம். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்த திருமணம் என்பதால்... தீனா திருமணம் செய்து கொண்டு காதலிக்க உள்ளதாகவும் பூரிப்புடன் கூறி இருந்தார்.
காலையில் இருந்தே தீனாவின் திருமண புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில், இதை தொடர்ந்து... தீனா - பிரகதியின் வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.