- Home
- Cinema
- 50 வயதை தாண்டியும்... திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட நடிகைகள்!
50 வயதை தாண்டியும்... திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட நடிகைகள்!
80-பது மற்றும் 90-களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த ஹீரோயின்கள் சிலர், ஒரு சில காரணங்களால் தற்போது வரை திருமணம் செலுத்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்கள் அவர்கள் யார்?... யார்? என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

சித்தாரா
இயக்குனர் கே.பாலச்சந்தரால், 'புதுப்புது அர்த்தங்கள்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் செய்யப்பட்ட கேரளத்து பைங்கிளியான நடிகை சித்தாரா, இந்த வருடம் தன்னுடைய 50 வயதை எட்ட உள்ளார். இவர் ஒருவரை காதலித்த நிலையில், அந்த காதல் கை கூடாததால் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல், பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் வாழ்த்த வருகிறார். அவ்வப்போது ஒரு சில படங்களிலும் தலை காட்டி வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
மும்தாஜ்
இயக்குனர் டி.ராஜேந்தர் இயக்கிய 'மோனிஷா என் மோனலிசா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி, ஐட்டம் சாங் வரை இறங்கி ஆடியவர் மும்தாஜ். 90-களில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர், சமீப காலமாக திரைப்படங்கள் நடிப்பதை நிறுத்திக்கொண்டு நிலையில், சமூக வலைத்தளங்களில் மட்டும் படு ஆக்ட்டிவாக இருக்கிறார். மேலும் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு விளையாடினார். இவருக்கு தற்போது 42 வயதாகும் நிலையில், திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய அம்மாவுடன் வசித்து வருகிறார். இவருக்கு சில உடல்நல பிரச்சனைகள் உள்ளதால், திருமணம் செய்து கொள்ள தயங்குவதாக சமூக வலைத்தளத்தில், ஒரு தகவல் வட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.
கௌசல்யா
கர்நாடகாவை சேர்ந்த நடிகை கௌசல்யா, 1996 ஆம் ஆண்டு.. 'ஏப்ரல் 19' என்கிற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து, 1997 ஆம் ஆண்டு நடிகர் முரளி நடித்த, 'காலமெல்லாம் காதல் வாழ்க' படத்தில் நடித்தார்.இப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெறவே, தளபதி விஜய்க்கு ஜோடியாக நேருக்கு நேர், பிரியமுடன், சொல்லாமலே, உன்னுடன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார். இவர் ஆன்மீக பயணத்தில் நாட்டம் காட்டியதால், 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறப்டுகிறது.
தபு:
பாலிவுட் நடிகையான தபு... தமிழில் 'காதல் தேசம்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இருவர், தாயின் மணிகொடி, சிநேகிதியே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பிரபல பாலிவுட் நடிகரின் காதல் சர்ச்சையில் சிக்கிய இவர், அந்த காதல் தோல்வியால் தான், 51 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
நக்மா:
மும்பையை சேர்ந்த நடிகை நக்மா... தமிழில் பிரபு தேவாவுடன் காதலன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்ஷா, கார்த்தியுடன் பிஸ்தா, உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர். முன்னணி ஹீரோயினாக இருந்த போது, கிரிக்கெட் வீரர் கங்குலி, சரத்குமார் ஆகியோரின் காதல் சர்ச்சையில் சிக்கிய இவர், சினிமா மார்க்கெட் இரக்கம் கண்டதும்... அரசியலில் கவனம் செலுத்த துவங்கினார். எப்போதுமே பிசியாக இருப்பதனால் என்னவோ... விரைவில் 50 வயதை எட்ட உள்ள நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
கோவை சரளா:
தமிழ் சினிமாவில் ஒரு காமெடி நடிகையாக மனோரமாவுக்கு அடுத்தபடியாக கொடி கட்டி பறந்தவர் கோவை சரளா தான். உலக நாயகன் கமல்ஹாசனுக்கே ஜோடியாக சதிலீலாவதி படத்தில் நடித்துள்ளார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். திரையுலகில் பிசியாக நடித்து வந்ததாலேயே என்னவோ திருமணமே செய்து கொள்ளாமல் தன்னுடைய 61 வயதிலும் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.
83 வயதில்.. 29 வயது காதலி மூலம் நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ள பிரபல நடிகர்!
ஷோபனா
கேரளாவை சேர்ந்த நடிகை ஷோபனா, பழம்பெரும் நடிகை பத்மினியின் குடும்பத்தில் இருந்து நடிக்க வந்த வாரிசு நடிகையாவார். பாரத நாட்டிய கலைஞரான இவர், தமிழில் 'மங்கள நாயகி 'என்கிற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின்னர் எனக்குள் ஒருவன் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி சேர்ந்த ஷோபனா, தன்னுடைய ஹீரோயின் கேரியரை துவங்கினார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்து... முன்னணி நடிகையாக மாறிய இவர், தற்போது நாட்டிய சாலை ஒன்றை நடத்தி வருகிறார். 53 வயதாகும் இவர் தற்போது வரை திருமணம் செய்துகொள்ள வில்லையென்றாலும், பெண் குழந்தை ஒருவரை தத்தெடுத்து கடந்த சில வருடங்களாக வளர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.