லவ் பண்றீங்களா?... இல்லையா? அதிதி பற்றிய கேள்வியால் கடுப்பான சித்தார்த் - காதல் குறித்து அளித்த காட்டமான பதில்
டக்கர் பட புரமோஷனின் போது நடிகை அதிதி ராவ் ஹைடரியை காதலிக்கிறீர்களா என்கிற கேள்விக்கு நடிகர் சித்தார்த் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் சித்தார்த். தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர் சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போது சித்தார்த் நாயகனாக நடித்துள்ள டக்கர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற ஜூன் 9-ந் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது. டக்கர் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்தின் புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளார் சித்தார்த்.
ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற சித்தார்த், அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் நடிகை சமந்தாவை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகி வந்ததால், திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட மனக்கசப்பால் பிரிந்துவிட்டனர். இதையடுத்து சமீப காலமாக நடிகர் சித்தார்த்தும், நடிகை அதிதி ராவ் ஹைடரியும் நெருங்கிப் பழகி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அட்ரா சக்க... நாளை விஜய் டிவி பிரபலம் KPY தீனாவுக்கு திருமணம்! மணமகள் யார் தெரியுமா?
பட விழாக்களில் ஒன்றாக கலந்துகொள்வது, ஜோடியாக சுற்றுலா செல்வது என தொடர்ந்து இவர்களின் புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால், இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்கிற பேச்சு கடந்த சில மாதங்களாகவே அதிகளவில் உலா வருகிறது. ஆனால் அதிதி ராவோ, சித்தார்த்தோ இதுகுறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இந்த நிலையில், டக்கர் பட புரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் சித்தார்த்திடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதன்படி காதல் விவகாரம் பற்றி எழுப்பப்பட்ட கேள்வியால் கடுப்பான நடிகர் சித்தார்த், அது என் பர்சனல் விஷயம், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அதைப்பற்றியெல்லாம் பேச விரும்பவில்லை. உங்களுக்கு அவ்ளோ ஆர்வமா இருந்துச்சுனா தனியா வாங்க சொல்றேன் என காட்டமாக கூறினார். நடிகர் சித்தார்த், டக்கர் படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கேன்சர் நோயாளிகளுக்காக விஜய் ஆண்டனியின் புதிய முன்னெடுப்பு! இந்த அதிரடி மாற்றத்திற்கான காரணம் இதுவா?