Asianet News TamilAsianet News Tamil

உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை..! தளபதி பேச்சுக்கு காட்டமாக பதிலடி கொடுத்த ராஜேஸ்வரி பிரியா!

நேற்று நடந்த லியோ திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில், விஜய் நா ரெடி பாடலுக்கு கொடுத்த விளக்கத்திற்கு எதிராக, தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு பதிலடி கொடுத்துள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
 

Rajeshwari priya statement against thalapathy vijay speech
Author
First Published Nov 2, 2023, 7:13 PM IST

தளபதி விஜய் நடிப்பில், அக்டோபர் 19-ஆம் தேதி வெளியான, லியோ படத்தின் வெற்றிவிழா நேற்று மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் சுமார் 5000-யிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர். அதே போல் லியோ படத்தில் பணியாற்றிய அணைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு, இப்படத்தில் நடித்த அனுபவத்தை மேடையில் பகிர்ந்துகொண்டனர்.

ஆரம்பத்தில் இருந்தே, தளபதியின் பேச்சுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தளபதி தன்னுடைய ரசிகர்களிடம், சமூக வலைத்தளத்தில் ரொம்ப கோபப்படாதீர்கள் என்கிற அட்வைசுடன் தன்னுடைய பேச்சை துவங்கினார்.  தொடர்ந்து பல விஷயங்களை பேசிய தளபதி, 'நா ரெடி' பாடல் சர்ச்சைக்கு எதிராக ராஜேஸ்வரி ப்ரியா உள்ளிட்ட சிலர், போர்க்கொடி தூக்கியது குறித்து பேசினார். 

Rajeshwari priya statement against thalapathy vijay speech

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுகுறித்து தளபதி பேசியதாவது.. "நான் ரெடி பாடலில் சில வரிகள் பிரச்சனை ஆச்சு. விரல் இடுக்குல,தீ பந்தம் என்ற வரி பிரச்சனை ஆச்சு. அது ஏன் சிகரெட்டாக தான் இருக்க வேண்டும், பேனாவாக கூட இருக்கலாம்ல. சினிமாவ சினிமாவாக பார்க்க வேணும் என கூறினார். தொடர்ந்து பேசிய தளபதி, பள்ளி கல்லூரி அருகில் கூட தான் மதுக்கடை உள்ளது. அதுக்குன்னு டெய்லி ரெண்டு ரவுண்ட் அடித்துவிட்டா பள்ளிகளுக்கு செல்கிறார்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.

தபதியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, ராஜேஸ்வரி பிரியா போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்று பதில் கூறி இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தன்னை ஒரு சினிமா நடிகனாக மட்டும் பாருங்கள் என்று கூறாமல் தளபதியாக பார்க்க சொல்கிறார்.

Rajeshwari priya statement against thalapathy vijay speech

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் இருப்பதாகவும் மாணவர்கள் குடிப்பதில்லை என்றும் பேசுவது மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.

நெகட்டிவ் கேரக்டரில் மட்டும் நீங்கள் புகை மதுவை பயன்படுத்தவில்லை. லியோ திரைபடத்தில் பள்ளிக்கு செல்லும் தன் பிள்ளை சிகரெட் குடிப்பதை நேரடியாக அப்பாவிடம் சொல்லும்போது கூட சிகரெட்டின் கெடுதல் பற்றி பேசாத நெகட்டிவ் அப்பாவாகவும் நடித்துவிட்டு காரணம் சொல்லி மழுப்பி பேசாதீர்கள்.

Samantha: நடிகை சமந்தா குடும்பத்தில் இணைந்த புதிய நபர்..! அன்பு மழை பொழிந்த புகைப்படம் வைரல்..!

Rajeshwari priya statement against thalapathy vijay speech

மக்களை ஆணையிட சொன்னீர்கள் .நானும் மக்களில் ஒருவர்தான் இனி மது,புகை காட்சிகளில் நடிக்கமாட்டேன் என நீங்கள் அறிக்கை கொடுங்கள்.நல்ல சமூகத்தை உருவாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் எங்களை போன்றோரால் உங்களது 2 ரவுண்டு பேச்சினை ரசிக்க முடியவில்லை.

மாணவர்கள் மத்தியில் மது,கஞ்சா,புகை மற்றும் பல போதை பொருள்கள் புழக்கத்தினை கண்ணெதிரே காண்பிக்கத் தயாராக உள்ளேன். என பதிலடி கொடுத்துள்ளார். இவரின் இந்த பதிவுக்கு சிலர் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், தளபதி ரசிகர்களோ வழக்கம் போல் தங்களின் எதிர்ப்பை பதிவிட்டு வருகிறார்கள்.

Meena: மீனாவை அட்ஜஸ்ட் பண்ணி நடிக்க சொன்ன தயாரிப்பாளர்.! மகளுக்காக முடியாதுனு சொன்ன படம் எது தெரியுமா?

 

Follow Us:
Download App:
  • android
  • ios