Samantha: நடிகை சமந்தா குடும்பத்தில் இணைந்த புதிய நபர்..! அன்பு மழை பொழிந்த புகைப்படம் வைரல்..!
நடிகை சமந்தா, தன்னுடைய குடும்பத்திற்கு புதிய நபர் ஒருவரை வரவேற்றுள்ளார். அவருடன் அன்பு மழை பொழிந்து, நேரம் செலவிட்ட, இன்ஸ்டாகிராம் ஸ்டோரி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா, மாயோசிட்டிஸ் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து கொள்ளவும், தன்னை ரிலாக்ஸாக வைத்து கொள்ளவும், சினிமாவில் இருந்து ஆறு மாதம் விலகி இருந்த நிலையில், தற்போது மீண்டும் திரைப்பட பணிகளில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அதே போல் தன்னுடைய வழக்கமான ஜிம் ஒர்க் அவுட்டையும் துவங்கியுள்ளார்.
மேலும் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர துவங்கியுள்ள சமந்தா. நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய செல்ல பிராணிகளான ஹாஷ் மற்றும் சாஷாவுடன் நேரம் செலவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து தற்போது தன்னுடைய குடும்பத்திற்கு புதிய பூனை ஒன்றை வரவேற்றுள்ளார் சமந்தா.
ஜெலடோ என பெயரிடப்பட்ட இந்த பூனை கருப்பு மற்றும் சாம்பல் நிறம் கொண்ட, பாரசீக (பெர்ஷியன்) ரக பூனையாகும். சமந்தா, தன்னுடைய ஒர்க் அவுட் முடிந்து, தன்னுடைய செல்ல பிராணி மீது மண்டியிட்டு படுத்து கொண்டு, அன்பு மழை பொழியும் போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.இந்த புகைப்படத்தின், "Excited for tomorrow and so is my Goose" என கேப்ஷன் ஒன்றை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் சமந்தா, அமேசான் பிரைம் வீடியோவுக்காக நடித்து முடித்துள்ள வெப் சீரிஸானா சிட்டாடல் தொடர் இந்திய பதிப்பில் வெளியாக உள்ளது. இதனை ராஜ் & டிகே ஆகியோர் இயக்கி உள்ளனர். இதில் சமந்தாவுக்கு ஜோடியாக, வருண் தவான் நடிக்கிறார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதை தொடர்ந்து தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் சென்னை ஸ்டோரிஸ் திரைப்படத்தில் சமந்தா ரூத் பிரபு ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் மேலும் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.