ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும் SSMB29 திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

SSMB29 Global Release : இயக்குனர் ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் எஸ்எஸ்எம்பி 29 திரைப்படம் ஆப்பிரிக்கக் காடுகளைப் பின்னணியாகக் கொண்டு தயாராகி வருகிறது. இப்படம் 2027ல் வெளியாகவுள்ளது. தற்போது படப்பிடிப்பு கென்யாவில் நடைபெற்று வருகிறது. பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ராஜமௌலி இந்தப் படத்தை மிகவும் ரகசியமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் மகேஷ் பிறந்தநாளில் முகம் தெரியாத ப்ரீ லுக் வெளியாகி நவம்பரில் அப்டேட் என்று சொல்லி எதிர்பார்ப்பை கூட்டினார். படத்தின் கதை பற்றி சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவினாலும், ராஜமெளலி எதையும் உறுதிப்படுத்தவில்லை. ஆப்பிரிக்கக் காடுகளில் அதிக ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும் எனத் தெரிகிறது. மகேஷ் பாபு சூப்பர் ஹீரோவாக வருவார் என்று கூறப்படுகிறது. இந்துப் புராணக் கதையும் படத்தில் இடம்பெறும் எனத் தெரிகிறது.

ராஜமெளலி பட அப்டேட் வந்தாச்சு

தற்போது கென்யாவில் படப்பிடிப்பு நடக்கிறது. 1000 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமான சர்வதேசப் படமாக இது உருவாகிறது. ராஜமௌலி கென்யாவிலிருந்தே மார்க்கெட்டிங் செய்யத் தொடங்கிவிட்டார். சமீபத்தில் ராஜமௌலி, எஸ்எஸ்எம்பி 29 படக்குழுவினருடன் கென்ய நாட்டு அமைச்சரவைச் செயலாளர் முசாலியா முதவாடியை சந்தித்தார். ராஜமௌலி தன் படத்தின் சிறப்பம்சங்கள், படமாக்கப்படும் விதம், வெளியீட்டுத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி அவரிடம் விளக்கினார். முசாலியா ராஜமௌலியைப் பாராட்டி சமூக ஊடகங்களில் பதிவிட்டார். உலகின் சிறந்த இயக்குனர்களில் ராஜமௌலி ஒருவர் என்று புகழ்ந்தார்.

அவர் போட்டுள்ள பதிவில், உலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான ராஜமௌலிக்கு கென்யா மேடையாக அமைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இயக்குனர் அவர். இரண்டு தசாப்தங்களாக இயக்குனராக இருக்கும் ராஜமௌலி, அற்புதமான காட்சிகள், கதை சொல்லும் திறன், கலாச்சார பாரம்பரியங்களைப் பிரதிபலிக்கும் படங்களை உருவாக்குகிறார். அவர் தனது 120 பேர் கொண்ட குழுவுடன் தனது படத்திற்காக கென்யாவைத் தேர்ந்தெடுத்துள்ளார். ஆப்பிரிக்கக் காட்சிகளில் 95% கென்யாவில் படமாக்கப்படும். ஆசியாவின் மிகப் பெரிய படமாக இது இருக்கும். 120 நாடுகளில் பிரம்மாண்டமாக வெளியிடத் திட்டமிட்டுள்ளனர் என்று முசாலியா ட்விட்டரில் குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பின் மூலம் எஸ்எஸ்எம்பி 29 படத்திற்கு உலகளவில் விளம்பரம் தொடங்கியுள்ளது.