விவாகரத்தான பெண்.. அடம்பிடித்து கரம்பிடித்த இயக்குனர் ராஜமௌலி - ரமா ராஜமௌலி.. அவங்க யாருனு தெரியுமா?
RajaMouli : இன்னும் நேரடியாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்தையும் இயக்கவில்லை என்றாலும் கூட கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ள இயக்குனர் தான் ராஜமௌலி.
rajamouli
கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான ஜூனியர் என்டிஆரின் "ஸ்டூடன்ட் நம்பர் ஒன்" என்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை இயக்குனராக தொடங்கியவர் தான் ராஜமௌலி. அந்த முதல் திரைப்படம் அவருக்கு பெரிய வெற்றியை தரவில்லை என்றாலும், இன்று அவர் தான் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் இயக்குனர்.
rama
பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கி ஆஸ்கர் வரை சென்று வந்தவர் தான் ராஜமௌலி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அவருடைய குடும்ப வாழ்க்கை பற்றி பலருக்கும் பெரிய அளவில் தெரியாது. சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2001ம் ஆண்டு, ஆடை வடிவமைப்பாளரான ரமா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ராஜமௌலி.
Costume Designer Rama
யார் இந்த ரமா?
தெலுங்கு திரை உலகில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தவர் தான் ரமா. ஆனால் கடந்த 2001ம் ஆண்டு ராஜமௌலி அவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே, ரமாவிற்கு திருமணம் நடந்து முடிந்து, ஒரு மகன் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆடை வடிவமைப்பாளரான அவர் மீது காதல் கொண்ட ராஜமவுலி, விவாகரத்தான பெண் என்று தெரிந்தும் அவரோடு தன் வாழ்க்கையை இணைத்துக்கொள்ள, சில முறை போராடியே அவரை திருமணம் செய்துள்ளார்.
keeravani
ரமாவின் முதல் திருமணத்தில் பிறந்த கார்திகேயாவை ராஜமௌலி தனது மகனாக தத்தெடுத்தார். இப்பொது அவருக்கு திருமணம் முடிந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். அதன் பிறகு ராஜமௌலி மற்றும் ரமா ஆகிய இருவரும் இணைந்து, ஒரு பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்ல, ரமா ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணியின் மனையின் சகோதரி ஆவார்.
பிரதீப் ஆண்டனி விஷயத்தில் நீதி தவறியது தான் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற காரணமா?