'ராஜா ராணி 2' சீரியல் அம்மா நடிகையின் ஆபாச புகைப்படத்தால் பரபரப்பு! வெளியான அதிர்ச்சி தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி 2 ' சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

raja rani 2 serial fame praveena cyber crime police complaint

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'ராஜா ராணி 2 ' சீரியலில் அம்மா வேடத்தில் நடித்து வரும் நடிகை பிரவீனா தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழி சீரியல்களிலும் மிகவும் பிரபலமான நடிகை பிரவீணா, தனது பெயரை களங்கப்படுத்தும் விதத்தில்... மார்பிங் செய்து ஆபாச புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த அந்த நபர் தன்னை பின்தொடர்பவர்களுக்கு தேவையற்ற செய்திகள் மற்றும் படங்களை அனுப்பியுள்ளதாகவும் கூறியுள்ளார். பலமுறை அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் திருந்தாததால் தற்போது புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்: இடுப்பை காட்டுவதில் ரம்யா பாண்டியனையே ஓரம் கட்டிய காஜல் பசுபதி! பார்த்தாலே பற்றிக்கொள்ளும் படு ஹாட் போட்டோஸ்!

 

raja rani 2 serial fame praveena cyber crime police complaint

இதுகுறித்து பிரவீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  "என்னை பின் தொடர்பவர்களுக்கு என் அன்பான வணக்கம். கடந்த சில மாதங்களாக, தெரியாத சமூக வலைதள கணக்கு ஒன்று என்னைப் போல் நடித்து, நான் பின்தொடரும் அனைவருக்கும் தேவையற்ற செய்திகளையும் படங்களையும் அனுப்பி வவருகிறார்கள் . என் குடும்பத்தினர் மற்றும் என்னுடன் பணிபுரியும் சக ஊழியர்களுக்கும் தேவையில்லாத சில புகைப்படங்களை அனுப்பியுள்ளனர். பலமுறை நான் எச்சரித்தும் பலனில்லை.

மேலும் செய்திகள்: Jai Bhim: இப்போ என்ன செய்ய போகிறார் பாமக பாலு..! கோல்டன் குளோப் பட்டியலில் இடம் பிடித்த 'ஜெய் பீம்'!

எனவே, நான் இப்போது அதிகாரப்பூர்வமாக சைபர் போலீசில் புகார் செய்துள்ளேன்.அவர்கள் நிலைமையை கவனித்து குற்றவாளியை கண்டுபிடித்து விடுவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் தற்போது என்னை பின்தொடர்பவர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். என்னைப் போல் நடிக்கும் அல்லது என் பெயரில் தேவையற்ற செய்திகளை அனுபவர்களை தடை செய்துவிடுங்கள். இப்படிக்குஉண்மையுள்ள, பிரவீணா லலிதாபாய்". என கூறியுள்ளார்.

raja rani 2 serial fame praveena cyber crime police complaint

மேலும் செய்திகள்: Valimai: வீட்டிலேயே 'வலிமை' படத்தை பார்த்துவிட்டு அஜித் செய்த செயல்! திக்குமுக்கு ஆடிப்போன எச்.வினோத்?

இவரது இந்த அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுளளது. இவர் தமிழில் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று, போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆல்யா மானசா முக்கிய வேடங்களில் நடிக்கும் விஜய் டிவியின் ராஜா ராணி 2 சீரியலில் பிரவீணா (சிவகாமி) என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர் கொடுத்த புகாரில் அடிப்படையில் தற்போது கன்னியாகுமரியை சேர்ந்த  2 வாலிபர்களை திருவனந்த புறம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுபோல் அவ்வப்போது பாதிக்கப்படும் பெண்கள் அனைவரும் தைரியமாக, புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios