சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் அமேசானில் வெளியாக உள்ளதாகவும், தயாரிப்பு செலவை விட இருமடங்கு அதிக லாபத்திற்கு படத்தை விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி ரிலீஸ் செய்தால் சூர்யாவின் எந்த படத்தையும் தியேட்டரில் வெளியிடமாட்டோம் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இந்தியில் இயக்கிய லக்‌ஷ்மி பாம் படத்தை டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’. 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழி மாற்று செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. லாரன்ஸே இயக்குகிறார். துவக்கத்தில் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தை விட்டு வெளியேறிய லாரன்ஸ், பின்னர் சமாதானமடைந்து இயக்க தொடங்கினார். 

இதையும் படிங்க: துளிகூட டிரஸ் இல்ல... தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த தமன்னா...!

‘லக்‌ஷ்மி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ‘காஞ்சனா’படத்தில் சரத்குமார் நடித்திருந்த திருநங்கை வேடத்தில் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். திருநங்கை கெட்டப்பில் அக்‌ஷய் குமார் இருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி தாறுமாறு வைரலானது. 

இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக தட்டித்தூக்க பக்கா பிளான்... பெண்களுக்கு “திரெளபதி” இயக்குநர் வைத்த கோரிக்கை...!

இந்த படம் மே 22ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதனை டிஜிட்டலில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லாக்டவுன் காரணமாக சினிமா தொடர்பான அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், லக்‌ஷ்மி பாம் படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால் சொன்ன தேதிக்கு படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த படத்தை Disney+Hotstaryy-யில் ரிலீஸ் செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.