ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பொன்மகள் வந்தாள்'. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. இதனிடையே அமேசான் ப்ரைம் நிறுவனம் ரூ.9 கோடி ரூபாய் கொடுத்து அந்த படத்தை வாங்கிவிட்டதாகவும், விரைவில் அந்த திரைப்படம் விரைவில் ஆன்லைனில் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இனிமேல் 2டி நிறுவனம் தயாரிக்கும் எந்தப் படத்தையும் வெளியிடுவதில்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதையும் படிங்க: அஜித் அப்பா, அம்மா இவங்க தான்... இதுவரை யாருமே பார்த்திடாத அசத்தல் போட்டோ...!

இந்நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரும் தயாரிப்பாளருமான என்.ராமசாமி என்கிற முரளி இராம. நாராயணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் திரைப்படங்களை டிஜிட்டலில் வெளியிடும் முறைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார். கொரோனாவின் கோர தாண்டவத்தில் திரை அரங்குகள் மூடப்பட்டிருக்கும் இந்த சமயத்தில்,தயாரிப்பாளர்கள் தங்கள் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் தவித்து கொண்டிருக்கும் போது ஓடிடி பிளாட்பாரம் என்பது காலத்தின் கட்டாயம் ஆகிறது. 

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

சிறு பட தயாரிப்பாளர்கள், பெரிய பட தயாரிப்பாளர்கள் என அனைவரது கருத்தையும் கேட்காமல் ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துக்களை அனைத்து தயாரிப்பாளர்களின் கருத்தாக ஒலிப்பது தவறு. எந்த ஒரு நிறுவனம் டிஜிட்டல் வெளியீட்டிற்காக பெரிய பட்ஜெட் படத்தை வாங்குகிறதோ அந்த நிறுவனம் 5 சிறு முதலீட்டு படங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும் அதனை பெரிய பட தயாரிப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும். 

இதையும் படிங்க: பெரிய இடத்து மாப்பிள்ளையாகும் பிரபாஸ்?... மெகா ஸ்டார் குடும்பத்து பெண்ணை கைபிடிக்க போறாராம்...!

தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் வருடத்திற்கு 25 பெரிய படங்கள் விற்பனையானால், 125 சிறிய படங்களும் சிரமமில்லாமல் விற்பனையாகும் என்று ஆலோசனை வழங்கியுள்ளார். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றுகூடி பேசி சுமூகமான முடிவை எட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.