அஜித் அப்பா, அம்மா இவங்க தான்... இதுவரை யாருமே பார்த்திடாத அசத்தல் போட்டோ...!
இந்நிலையில் அப்பா, அம்மாவுடன் தல அஜித் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் மிகவும் முக்கியமான இடத்தில் இருக்கும் தல அஜித்திற்கு மே 1ம் தேதி பிறந்த நாள் வர உள்ளது. ரசிகர்கள் மன்றத்தை கலைத்துவிட்டாலும், தல அஜித் மீது பாசத்தை பொழியும் ஃபேன்ஸ் கூட்டத்திற்கு சற்றும் குறைவில்லை. தனது சினிமா சம்பந்தமான புரோமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டுமல்லாது, திரைத்துறை சம்மந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார் என்றாலும் அவரது ரசிகர்கள் மத்தியில் மவுசு குறையவில்லை.
இதையும் படிங்க: காதல் முதல் கல்யாணம் வரை... தல அஜித் - ஷாலினியின் இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு...!
இந்நிலையில் தல அஜித் மே 1ம் தேதி அன்று தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாமென அஜித் தரப்பில் இருந்து கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க:டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!
இதையடுத்து பிறந்த நாளான்று 14 திரைத்துறை பிரபலங்களை வைத்து மாஸாக ரிலீஸ் செய்யவிருந்த காமென் டி.பி.யை நேற்றே ஆர்ப்பாட்டம் இல்லாமல் அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ரிலீஸ் செய்தனர். சில மணி நேரங்களிலேயே பல லட்சம் ஷேர்களை கடந்து, #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது.
இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!
தற்போது தல அஜித்தின் மற்றொரு ஸ்பெஷல் விஷயம் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. எப்போது தல அஜித் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது மீடியா வெளிச்சம் படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பார். அதனால் தான் என்றாவது ஒருநாள் கண்ணில் படும் அஜித் பிள்ளைகளின் புகைப்படங்கள் கூட சோசியல் மீடியாவில் வைரலாகி விடுகிறது. இந்நிலையில் அப்பா, அம்மாவுடன் தல அஜித் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அப்பா, அம்மாவை பாதுகாப்பாக அணைத்து கொண்டிருக்கும் அஜித்தின் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது.