செய்திவாசிப்பாளராக சின்னத்திரைக்குள் வந்து , சீரியல் நடிகை, வெள்ளித்திரை நாயகி, என தன்னுடைய திறமையாலும், அழகாலும் முன்னேறி கொண்டே சென்றவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

'மேயாத மான்' படத்தின் வெற்றி பிறகு இவர் நடிப்பில் வெளியான 'மான்ஸ்டர்', 'கடைக்குட்டி சிங்கம்' , 'மாஃபியா' போன்ற படங்கள் தொடந்து வெற்றி பெற்றதால், பிரியா பவானி வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார்.

மேலும் முன்னணி இடத்தை பிடிக்க பல படங்களில் கமிட் ஆகி சத்தமில்லாமல் நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கும், 'இந்தியன் 2 ' ஹரிஷ் கல்யாணுடன் 'ஓ மணப்பெண்ணே' , தெலுங்கில் ஒரு படம் என ஓய்வில்லாமல் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: 'சல்பேட்டா' படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேரும் இளம் நடிகை! யார் தெரியுமா?
 

அந்த வகையில் தற்போது இவர் காஞ்சனா, காஞ்சனா 2 , போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களை இயக்கி, தயாரித்து நடித்த நடிகர் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாகவும், விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் வேகமாக சுற்றி வருகிறது.