தமிழ் சினிமாவில், பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமானவர் பிரகாஷ் ராஜ். இவர் சமீபத்தில் கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தனது மகனுடன் இணைந்து தன்னுடைய வீட்டின் தோட்டத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி, இவருடைய ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்தது. 

இந்த சேலஞ்சை, நடிகர் பிரகாஷ் ராஜ் மகன் வேதந்த்துடன் இணைந்து ஐந்து பிரபலங்களுக்கு விடுத்துள்ளார்.  

மேலும் செய்திகள்: எப்படி இருந்த மனிஷா கொய்ராலா இப்படி ஆகிட்டாங்க? துளியும் மேக்அப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம்..!
 

இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை மலையாள முன்னணி நடிகர் மோகன்லால், சூர்யா, நடிகைகள் ரக்‌ஷிதா ஷெட்டி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் த்ரிஷா ஆகியோருக்கு விடுத்துள்ளனர். ஏற்கனவே தளபதி விஜய் சமீபத்தில், மகேஷ் பாபுவின் இந்த கிரீன் இந்தியா சேலஞ்சை ஏற்று தன்னுடைய வீட்டில் செடிகளை நட்டு அதன் புகைப்படங்களை வெளியிட்டார் அது இந்திய அளவில் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

இதை தொடர்ந்து தற்போது நடிகை த்ரிஷா அவருடைய சமூக வலைதள பக்கத்தில். பிரகாஷ்ராஜின்  இந்த சேலஞ்சை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தன்னை நாமினேட் செய்ததற்கு பிரகாஷ்ராஜுக்கு நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: 29 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கும் சமந்தாவின் மாமியார் அமலா..!
 

இவரை போலவே, மோகன்லால், சூர்யா, ரம்யா கிருஷ்ணன், ரக்ஷிதா ஷெட்டி உள்ளிட்டோர் சவாலை ஏற்று செய்வார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.