மாருதி இயக்கத்தில் உருவாகி வரும் ராஜா சாப் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் பிரபாஸ் தன் சம்பளத்தை குறைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Prabhas Reduce His Salary : பிரபாஸ் நடிக்கும் ராஜா சாப் திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. இப்படத்தின் டீசர் வருகிற ஜூன் 16ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் பிரபாஸ் தன்னுடைய சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சம்பளத்தை குறைத்த பிரபாஸ்
வழக்கமாக ஒரு படத்திற்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் பிரபாஸ், ராஜா சாப் படத்திற்கு அதைவிட கம்மியான சம்பளம் தான் வாங்கி உள்ளாராம். லேட்டஸ்ட் தகவல்களின்படி, ராஜா சாப் படத்திற்கு பிரபாஸ் 100 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஜா சாப் படத்தின் பாடல்களுக்கு ஜப்பானிய பதிப்பு ஒன்றை உருவாக்குவது குறித்து தயாரிப்பாளர்கள் தன்னிடம் கேட்டதாக தமன் தெரிவித்தார்.

ஜப்பானில் ராஜா சாப் ஆடியோ லாஞ்ச்
மேலும் ஜப்பானில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாகவும் தமன் கூறினார். எதுவாயினும், தமனின் இந்த கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது. ராஜா சாப் படத்தை மாருதி இயக்குகிறார். இதில் நாயகியாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றனர். பழைய ஹிந்தி ஹிட் பாடல் ராஜா சாப் படத்தில் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
அமிதாப் பச்சனின் டான் படத்தில் இடம்பெற்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல் தவறானது என்று பின்னர் படக்குழுவினர் தெளிவுபடுத்தினர். டான் படப்பாடலின் ரீமிக்ஸ் உரிமை தங்களிடம் இல்லை என்று பிரபாஸ் படத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கல்கி 2898 AD. தேசிய விருது பெற்ற இயக்குனரான நாக் அஸ்வின் தான் இப்படத்தை இயக்கினார். தீபிகா படுகோன் நாயகியாக நடித்த இப்படத்தில் பிரபாஸுடன் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரும் நடித்தனர். மகாபாரத காலத்தில் தொடங்கும் கல்கி 2898 AD என்ற இப்படம் 1000 கோடி வசூல் சாதனையையும் படைத்தது.
