பிரபாஸ் ஒரு பான் இந்திய நட்சத்திரம், அவருடைய படங்களுக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். பிரபாஸின் வரவிருக்கும் 6 படங்கள் பற்றி பார்க்கலாம்.
Image credits: Social Media
Tamil
தி ராஜா சாப்
இயக்குனர் மாருதியின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் இத்திரைப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 450 கோடி ரூபாய்.
Tamil
கன்னப்பா
கன்னப்பா படத்தில் பிரபாஸ் கேமியோ ரோலில் நடிக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ள இப்படத்தின் பட்ஜெட் 100-200 கோடி ரூபாய், இது ஏப்ரல் 25, 2025 அன்று வெளியாகும்.
Tamil
ஸ்பிரிட்
'அனிமல்' மற்றும் 'அர்ஜுன் ரெட்டி' புகழ் சந்தீப் ரெட்டி வங்கா தான் ஸ்பிரிட் படத்தை இயக்குகிறார். சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் இப்படம் 2026ல் வெளியாகும்.
Tamil
சலார் பார்ட் 2
பிரசாந்த் நீல் இயக்க உள்ள இப்படம் 2026 இல் வெளியாகலாம், இது 2023 இல் வெளியான 'சலார் பார்ட் 1 படத்தின் தொடர்ச்சியாகும். இந்த படத்திற்காக சுமார் 340 கோடி ரூபாய் பட்ஜெட் வைத்துள்ளனர்.
Tamil
கல்கி 2898 AD 2
நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த திரைப்படம் 2026ல் வெளியாகலாம். 2024ல் வெளியான பிளாக்பஸ்டர் 'Kalki 2898 AD' படத்தின் தொடர்ச்சியான இந்த படத்திற்கு 500-600 கோடி ரூபாய் பட்ஜெட்டாம்.
Tamil
ஃபௌஜி
பிரபாஸ் இயக்குனர் ஹனு ராகவபுடியின் அடுத்த படமான 'ஃபௌஜி' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இப்படம் 2026ல் வெளியாகலாம்.