MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன ஒரு தாராள மனசு; ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை கட்டும் பிரபாஸ்!

என்ன ஒரு தாராள மனசு; ஏழைகளுக்காக இலவச மருத்துவமனை கட்டும் பிரபாஸ்!

பாகுபலி நாயகன் பிரபாஸ் தன்னுடைய பெரியப்பா கிருஷ்ணம் ராஜுவின் கனவை நனவாக்கும் விதமாக இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட உள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 03 2025, 03:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Prabhas Build Free Hospital : பான் இந்திய ஹீரோவான பிரபாஸ், ரெபல் ஸ்டார் கிருஷ்ணம் ராஜு பெயர்களைச் சொன்னாலே அவர்களின் விருந்தோம்பல், கொடைத்தன்மை நினைவுக்கு வரும். சினிமாக்காரர்களை கேட்டாலும் முதலில் அவர்கள் அளிக்கும் விருந்து சாப்பாட்டைப் பற்றித்தான் சொல்வார்கள்.. அப்படியே ரெபல் ஸ்டார் கிருஷ்ணம்ராஜு போலவே பிரபாஸும் சேவைகளைச் செய்து வருகிறார். இப்போது பெரியப்பாவின் கனவை நிறைவேற்றப் போகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இலவச மருத்துவமனை கட்டும் பிரபாஸ்

வலது கையால் செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரியாது. அதேபோல் பிரபாஸ் நடிகராக வளர்வதற்கு உறுதுணையாக இருந்த கிருஷ்ணம் ராஜுவும் சேவை காரியங்களில் எப்போதும் முன்னணியில் இருப்பார். அவருடைய நடிப்பு வாரிசாக இன்று பான் இந்திய ஸ்டாராக சினிமா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறார் பிரபாஸ். ஒரு பக்கம் படங்கள் நடித்துக்கொண்டே ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்து பெரிய மனசுடன் இருக்கிறார். விரைவில் பிரபாஸ் ஆதரவுடன் ரெபல் ஸ்டார் கிருஷ்ணம்ராஜுவின் மனைவி ஷியாமளா தேவி இணைந்து ஒரு மருத்துவமனை கட்டி ஏழைகளுக்கு மருத்துவம் அளிக்க இருக்கிறார்களாம். 

​இதையும் படியுங்கள்... பிரபல தொழிலதிபர் மகளுடன் பிரபாஸூக்கு திருமணமா? 45 வயதாகியும் திருமணம் செய்யாதது ஏன்?

34

பெரியப்பாவின் கனவை நனவாக்கும் பிரபாஸ்

விரைவில் ஒரு மருத்துவமனை கட்டி இந்தியாவில் எந்தப் பகுதியில் உள்ளவர்களும் வந்து இலவசமாக மருத்துவம் பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் மருத்துவமனை அமைக்க இருப்பதாக ஷியாமளா தேவி கூறுகிறார். இதற்கு பிரபாஸ் ஆதரவு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது கிருஷ்ணம்ராஜுவின் ஆசை என்றும் அவர் கூறினார். பான் இந்திய ஸ்டார் பிரபாஸ் சேவை காரியங்களில் எப்போதும் முன்னணியில் இருப்பார். ஆறடிக்கு மேல் உயரம் உள்ள அவர் உதவி செய்வதிலும் தன்னுடைய பெரிய மனதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளார். 

44

பாரி வள்ளலாக வலம் வரும் பிரபாஸ்

அதுமட்டுமல்லாமல் ஷூட்டிங் சமயத்தில் தன்னுடைய கேரவன், ஊழியர்கள் செலவுகளை பிரபாஸே ஏற்றுக்கொள்வாராம். கடந்த ஆண்டு ஆந்திராவில் விஜயவாடா, ஹைதராபாத்தில் வெள்ளம் ஏற்பட்டபோது பிரபாஸ் தாராளமாக ரூ.2 கோடியை ஒவ்வொரு கோடி வீதம் இரண்டு தெலுங்கு மாநிலங்களுக்கும் கொடுத்த விஷயம் தெரிந்ததே. ஆனால் பிரபாஸ் செய்யும் சேவை காரியங்களுக்கு எப்போதும் கவனம் ஈர்க்க மாட்டார்.. விளம்பரம் என்றால் சுத்தமாக பிடிக்காது. எந்த உதவியாக இருந்தாலும் ரகசியமாக செய்து தன்னுடைய பெருந்தன்மையை காட்டுகிறார்.

​இதையும் படியுங்கள்... பிரம்மராக்ஷஸாவாக மாறும் பிரபாஸ்: பிரசாந்த் வர்மாவின் கனவு திட்டம்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்
தமிழ் சினிமா
டோலிவுட்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே ஒரு கையெழுத்தால் 100 கோடியை இழந்த அஜித் பட நடிகை... 1000 படங்களில் நடித்தவருக்கு இந்த நிலைமையா?
Recommended image2
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image3
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved