Asianet News TamilAsianet News Tamil

நடிகையை முழு நிர்வாணமாக படம் எடுத்த சர்ச்சை இயக்குனர்... காமம் ததும்பும் பேரழகியை உரித்துக் காட்டியதால் வழக்கு...

Pornstar Mia Malkovas God Sex And Truth Released Director RGV Says Watch It With Good Quality Headphones
Pornstar Mia Malkova's 'God, Sex And Truth' Released, Director RGV Says Watch It With Good Quality Headphones
Author
First Published Jan 29, 2018, 1:43 PM IST


பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா மீது சமூகநல அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்குத் போட்டுள்ளனர்.

எப்போதுமே சர்ச்சையை சட்டை பாக்கிட்டில் வைத்துக் கொண்டு அலையும் இயக்குநர் யார் என்று கேட்டால் சுலபமாக சொல்லிவிடலாம் அது ராம் கோபால் வர்மா என்று, இவர் அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பட நடிகையான மியா மல்கோவாவைக் கதையின் நாயகியாகக்கொண்டு 'GOD, SEX and TRUTH' என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

Pornstar Mia Malkova's 'God, Sex And Truth' Released, Director RGV Says Watch It With Good Quality Headphones

இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ மற்றும் படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியானது. இதில் முழு நிர்வாணமாக இருக்கும் அமெரிக்க செக்ஸ் பட நாயகியான மியா மல்கோவாவுக்கு ராம் கோபால் வர்மா நடிப்பு சொல்லிக்கொடுப்பது போன்ற காட்சிகள் அதாவது முழு நிர்வாண கோலத்தில் இடம்பெற்றிருந்தன. இதனால் அப்போதே பெரும் சர்ச்சைகள் கிளம்பின.

Pornstar Mia Malkova's 'God, Sex And Truth' Released, Director RGV Says Watch It With Good Quality Headphones

இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரவில்லை என்பதால் இணையதளத்தில் வெளியிடுவதற்கான முகவரியையும் குறிப்பிட்டு அந்தக் குறும்படத்தை கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியிட்டார். இந்தப் படத்தால் தற்போது ராம் கோபால் வர்மாவுக்கும், மியா மல்கோவாவுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

Pornstar Mia Malkova's 'God, Sex And Truth' Released, Director RGV Says Watch It With Good Quality Headphones

இருவர் மீதும் சமூகநல அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “இந்தியக் கலாசாரத்தைக் கெடுத்து இளைஞர்களை நாசமாக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் இருவர் மீதும் 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 67ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Pornstar Mia Malkova's 'God, Sex And Truth' Released, Director RGV Says Watch It With Good Quality Headphones

மேலும், சமூக ஊடகங்களில் ராம் கோபால் வர்மாவால் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் தொடர்பாகவும் புகார் கூறப்பட்டு உள்ளது. இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாகத் பேசப்பட்டு வருகிறது.

Pornstar Mia Malkova's 'God, Sex And Truth' Released, Director RGV Says Watch It With Good Quality Headphones

இந்தப் படத்துக்கு பாஸிட்டிவ்வாக வரும் கருத்துகளுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து வருகிறார் ராம் கோபால் வர்மா. மேலும், “இந்தப் படத்தை பாராட்டி கருத்து தெரிவித்த கல்லூரிப் பெண்கள் மற்றும் பெண்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவைப் பெரிதும் வரவேற்கிறேன். உங்கள் கருத்தை இன்னும் வெளிப்படையாகவும் உரக்கவும் தெரிவியுங்கள் என கூறியிருக்கிறார். மேலும் அப்போதுதான் இந்தப் படத்துக்கு எதிர்மறை கருத்தை முன்வைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களின் வாயை மூட முடியும் என சர்ச்சையாக கூறியிருக்கிறார். அருவருப்பான எண்ணம் கொண்ட அவர்கள் ஒருபோதும் செக்ஸ் அழகை உணர மாட்டார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios