கருப்பாக இருப்பதால், தன்னை நடிகரும் - தயாரிப்பாளருமான பிரபலம் ஒருவர் திரைப்படத்திலிருந்து நிராகரித்து விட்டதாக நடிகை நிகிதா தத்தா,  தான் கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2014 ஆண்டு வெளியான 'லேகர் ஹம் தீவான தில்' என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர், நடிகை நிகிதா தத்தா.  இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்த  பாலிவுட் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.

எனவே, சீரியல் நடிகையாக மாறினார் நிக்கிதா தத்தா.  சின்னத்திரையில் கால் பதித்து விட்டால் வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்காது என பல்வேறு எதிர்ப்புகள்  இவருக்கு எழுந்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல், பல சீரியல்களில் நாயகியாக நடித்தார்.

இத்தாலி நிலை இந்தியாவிற்கு வேண்டாம்! கொரோனா பயங்கரம்: நண்பர் சொன்னதை தெரிவித்த அர்ஜுன்!

இது அவருக்கு சின்னத்திரை வட்டாரத்தில் மிக பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.  இந்நிலையில் இவர் தான் திரையுலக வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து, பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க முயற்சி செய்தபோது, ஒரு படத்தில் நடிக்க இயக்குனர் தன்னை தேர்வு செய்த போதிலும், லேசாக நிறம் கருப்பாக இருந்ததால்,  அவரை அந்த படத்தில் இருந்து  நடிகரும், தயாரிப்பாளருமான ஒருவர் நிராகரித்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

பெப்சி ஊழியர்களுக்கு ஓடி வந்து உதவி செய்த மாஸ்டர் பட இயக்குனர்!

அதுவும் அந்த படத்தின் கதைக்கு மிகவும் வெள்ளையான நடிகை தான் நடிக்க வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லையாம். இவரின் செயல் மனதை மிகவும் பாதித்ததாகவும், பின்னர் நடப்பது அனைத்தும் நன்மைக்கே என தன்னுடைய மனதை தானே சாமானத்தை படுத்திக்கொண்டதாக தெரிவித்துள்ளார் நிகிதா.