Asianet News TamilAsianet News Tamil

இத்தாலி நிலை இந்தியாவிற்கு வேண்டாம்! கொரோனா பயங்கரம்: நண்பர் சொன்னதை தெரிவித்த அர்ஜுன்!

கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இதனை பற்றி சிலர் கண்டு கொள்ளாமல்... வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனாவின் உண்மை முகம் தெரியாது என்று தான் கூற வேண்டும்.
 
Italy death rate per day 500 to 600 actor arjun emotional speech
Author
Chennai, First Published Mar 25, 2020, 11:45 AM IST

கொரோனாவின் கோர தாண்டவத்தில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், இதனை பற்றி சிலர் கண்டு கொள்ளாமல்... வெளியில் சுற்றி வருகின்றனர். அவர்களுக்கு கொரோனாவின் உண்மை முகம் தெரியாது என்று தான் கூற வேண்டும்.

இந்நிலையில் பிரபல நடிகர் அர்ஜுன், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Italy death rate per day 500 to 600 actor arjun emotional speech

இந்த வீடியோவில் இத்தாலியில் தற்போது பல உயிர்களை காவு வாங்கி வரும். கோரோனோ வைரஸ் பற்றி அவருடைய நண்பர் கூறிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்... "இந்த விஷயத்தை நான் சொல்லவில்லை தன்னுடைய நண்பர் இத்தாலியில் நர்ஸாக உள்ளார். அவர் தன்னிடம் பேசிய போது பகிர்ந்து கொண்ட விஷயம்.

Italy death rate per day 500 to 600 actor arjun emotional speech

இதுவரை இத்தாலியில் ஒரு நாளைக்கு 5 ஆயிரம் 500  முதல் 6 ஆயிரம் வரை  பாசிட்டிவ் அறிகுறியுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரிக்கிறது. அதே போல் 500  முதல் 600 பேர் வரை கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்கின்றனர்.  இதைப் பார்க்கும்போது எந்த அளவிற்கு நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், அதேபோல் அந்த ஊரில் சரியான மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாமல் போய் விட்டதாகவும், வேதனையோடு கூறியுள்ளார்.

Italy death rate per day 500 to 600 actor arjun emotional speech

நம் மக்களுக்கு இந்த நிலை வந்தால் அதனை யோசித்து கூட பார்க்க முடியாது. இதற்காக நாம் பணம் செலவு பண்ண வேண்டாம் தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்தாலே போதும். அதற்கும் இது பேசவேண்டிய நேரம் என்பதால் நான் பேசுகிறேன்.

தெரிந்தோ தெரியாமலோ வெளியில் போனால்.  அது ஒருவரை கொலை செய்வதற்கு சமம் கொஞ்சம் கொஞ்சமாக இந்த வைரஸ் பரவிவருகிறது. தன்னை கட்டு படுத்த வீட்டில் இருப்பதை சிறந்தது என அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios